அதிர்ந்துபோன திருவனந்தபுரம்.. அவமானம் கற்றுக்கொடுத்த பாடம்.. இஷான் கிஷன் மரண அடிக்கு காரணம் இதுதான்!
திருவனந்தபுரம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் 42 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த டி20 தொடரில் 4 இன்னிங்ஸில் மட்டும் ஆடிய இஷான் கிஷன், அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கும் முன்னேறி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய நட்சத்திர அதிரடி வீரர் இஷான் கிஷன் 43 பந்துகளில் 10 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 103 ரன்களை குவித்து அசரடித்துள்ளார். அதிலும் கடைசி 27 பந்துகளில் 85 ரன்களை இஷான் கிஷன் குவித்திருக்கிறார்.

இதனால் இஷான் கிஷன் பீஸ்ட் ஃபார்மில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பை தொடரில் இஷான் கிஷன் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கி இருக்கின்றனர். நம்பர் 3ல் இஷான் கிஷன் இவ்வளவு அதிரடியாக விளையாடுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
ஆனால் இஷான் கிஷனின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு அவமானமே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இஷான் கிஷன் ஒரு தவறான முடிவை எடுத்தார். அந்த தவறான முடிவு அவரது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக தலைகீழாகவே திருப்பியது என்று சொல்லலாம்.
ஏனென்றால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது இஷான் கிஷன் பாதியோடு இந்தியா திரும்பினார். இதன்பின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதோடு, பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய போதும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்களும் இஷான் கிஷன் பெயரை மறந்துவிட்டனர் என்றே சொல்லலாம்.
ஆனால் இஷான் கிஷன் கொஞ்சமும் மனம் தளராமல் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாட தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக பிசிசிஐ பார்வை இவர் பக்கம் திரும்பியது. இந்திய ஏ அணிக்காக விளையாட வாய்ப்பு வழங்கியது. இஷான் கிஷன் கொஞ்சம் தளரவில்லை. அங்கும் திறமையை நிரூபித்துக் காட்டிய இஷான் கிஷன், ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
அதன்பின் சையத் முஷ்டாக் அலி தொடரை கேப்டனாக வென்றதோடு, இறுதிப்போட்டியில் சதம் விளாசி சம்பவம் செய்தார். அந்த நேரத்தில் சுப்மன் கில் சொதப்ப, உடனடியாக இஷான் கிஷன் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் திலக் வர்மா காயம் அடைந்த போது, இஷான் கிஷனுக்கு டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக விளையாடி திறமையை காட்டும் வாய்ப்பு அமைந்தது.
அதற்கேற்ப நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 4 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 215 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் சஞ்சு சாம்சனை ஓரம்கட்டிவிட்டு இஷான் கிஷனை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்களே பேச தொடங்கியுள்ளனர். இதனால் இஷான் கிஷனின் அதிரடிக்கு அவர் பட்ட அவமானங்களே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
அதேபோல் ஏதேனும் ஒரு விஷயத்தில் உண்மையாக உழைத்தால், காலமே நமக்கான சூழலை உருவாக்கி கொடுக்கும் என்று சொல்வார்கள். அப்படிதான் திலக் வர்மா காயம் இஷான் கிஷனுக்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. இதனால் இனி இஷான் கிஷன் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவாகுவார் என்று பார்க்கப்படுகிறது.
-
"எங்க சின்ன தல சுரேஷ் ரெய்னா மாதிரியே இருக்கு" வெற்றிக்கு பின் சிஎஸ்கே ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications