கோலி எடுத்த திடுக்கிடும் முடிவு! உலகக் கோப்பையில் தோல்வி அடைந்த மறுநாளே! அதிர்ச்சி தரும் நிலைப்பாடு
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பைனலில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் கோலி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பைனலில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது . 2003 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோல்வி அடைந்தது.
அந்த நாளை கிரிக்கெட் பார்க்கும் யாரும் மறக்க மாட்டார்கள். கங்குலியின் மோசமான கேப்டன்சி, அவரின் திட்டமிடல் எல்லாம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு டாஸில் அவர் எடுத்த முடிவும் கூட கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதேபோல் நேற்றும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
தோல்வி அடைந்த இந்திய அணி: நேற்று ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.

அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் கோலி நிதானமாக 63 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கே எல் ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்தார்.
இதனால் 50 ஓவருக்கு 240 ரன்கள் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது.
( இந்த 2 பேர் எதுக்கு டீம்ல இருந்தாங்கன்னே தெரியலையே.. ரோஹித் தந்த இடம்.. டீமிற்கே எதிராக போய்விட்டது!)
பவுலிங்கில் சொதப்பல்: ஆஸ்திரேலியா அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தும் கூட இந்திய அணி தற்போது மோசமாக திணறிக்கொண்டு உள்ளது.முக்கியமாக இரண்டாவது ஓவரிலேயே ஷமி வார்னர் விக்கெட்டை எடுத்தார். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே வார்னர் விக்கெட்டை ஷமி எடுத்தார். அடுத்து பும்ரா பந்தில் மிட்சல் மார்ஷ் அவுட் ஆனார். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் ஸ்மித் மட்டும் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால் அவருடைய விக்கெட்டையும் பும்ரா எடுத்தார்.
அதன்பின் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். இதனால் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெறும் 4 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. டிராவிஸ் ஹெட் மட்டும் அதிரடியாக 137 ரன்களை எடுத்தார். வெறும் 43 ஓவரில் ஆஸ்திரேலியா அணி இலக்கை அடைந்து வென்றது. இதன் மூலம் 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது.

கோலி: இந்த உலகக் கோப்பையில் கோலி 3 சதங்களை அடித்தார். அதேபோல் தனது 50வது ஒருநாள் சதத்தையும் அடித்தார். இந்த நிலையில்தான் விராட் கோலி இன்று பிற்பகல் அதிர்ச்சி தரும் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி விராட் கோலி அவரது நீண்டகால மேனேஜர் பண்டி சஜ்தேவை பிரிவதாக அறிவித்தார்.. கோலி விரைவில் சொந்த நிறுவனத்தை தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேனேஜர் பண்டி சஜ்தே உடன் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுதான் இந்த முடிவிற்கு காரணம் என்கிறார்கள். கோலி சுயமாக ஒரு நிறுவனம் தொடங்கி அந்த நிறுவனம் இனி எல்லா முடிவுகளையும் பார்த்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications