தோனி இல்லாத சிஎஸ்கே பிளேயிங் XI.. தேர்வு செய்த இர்பான் பதான்.. சென்னை ரசிகர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்!
மும்பை: ஐபிஎல் தொடரில் தோனி இல்லாத சிறந்த சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளார். தோனிக்கு பதிலாக சர்ஃபராஸ் கானை தேர்வு செய்துள்ள இர்ஃபான் பதான், தோனி விளையாடப் போகும் கடைசி 2 ஓவர்களால் சிஎஸ்கே அணிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணி தொடர்பான விவாதம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏனென்றால் டெத் பவுலர் என்று நம்பிக்கை வைக்கப்பட்ட நேதன் எல்லீஸ் திடீரென காயம் காரணமாக விலகி இருக்கிறார். இதனால் அவரது இடத்தில் எந்த வீரர் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் தோனியை எப்படி பயன்படுத்த போகிறார்கள், சிறந்த ஃபார்மில் இருக்கும் சர்ஃபராஸ் கானுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா?, இளம் வீரர்களான கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் தொடர்பாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறியுள்ளதோடு, தேர்வும் செய்திருக்கிறார்.
அதன்படி இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ள பிளேயிங் லெவனில், சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, டிவால்ட் பிரெவிஸ், சர்ஃபராஸ் கான், கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர், அகீல் ஹொசைன், மேட் ஹென்றி, நூர் அஹ்மத், கலீல் அஹ்மத் (இம்பேக்ட் பிளேயர்) என்று தேர்வு செய்துள்ளார்.
இந்த அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு இர்ஃபான் பதான், இந்த அணியில் சர்ஃபராஸ் கானால் நம்பர் 6ல் விளையாட முடியும். ஒருவேளை தோனி தொடர்ந்து விளையாட முடிவு செய்தால்.. அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? அவரால் விளையாட முடியுமா? ஏனென்றால் ஏதோ ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுதான் ஆக வேண்டும்.
வெறும் 2 ஓவர்கள் மட்டும் தோனி விளையாடுவதால், சிஎஸ்கே அணிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.. இதனை நீண்ட காலமாகவே சொல்லி வருகிறேன்.. தோனியின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி கொடுக்கலாமே தவிர, சிஎஸ்கே அணிக்கு சரி வராது. குறைந்தபட்சம் தோனி 4 ஓவர்களாவது விளையாட வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கே அணிக்கு உதவியாக இருக்கும்.
தோனியால் 4 ஓவர்கள் கூட விளையாட முடியாத போது, அதற்கு தேவையான ஒரு அணியை சிஎஸ்கே அணி உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இர்ஃபான் பதானின் கருத்துக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருவது தான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications