வாழ்ந்தா இப்படி வாழணும்.. ராஞ்சியில் 4வது வீட்டை பிரம்மாண்டமாக கட்டிவரும் தோனி.. மிரளும் ரசிகர்கள்!
ராஞ்சி: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தோனிக்கு சொந்த ஊரான ராஞ்சியில் மட்டும் 3 வீடுகள் சொந்தமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் தற்போது புதிதாக ஒரு வீட்டை தோனி கட்டி வருகிறார். இந்த 4 வீடுகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரிய வந்துள்ளது. அதனை பார்க்கலாம்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக தோனி வலம் வந்து கொண்டிருக்கிறார். 44 வயதை எட்டிவிட்ட நிலையில், 2026 ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வை அறிவிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சிஎஸ்கே அணிக்குள் தோனியின் இடத்தை நிரப்ப சஞ்சு சாம்சன் கொண்டு வரப்பட்டுள்ளார். அதேபோல் இளம் வீரரான கார்த்திக் சர்மாவையும் சிஎஸ்கே அணி ரூ.14.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இதனால் தோனியின் கடைசி சீசனாக இது அமையலாம். சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் சில போட்டிகளில் மட்டுமே தோனியை பார்க்க முடியும் என்று தெரிகிறது. இந்த நிலையில் சொந்த ஊரான ராஞ்சியில் தோனி புதிய வீடு ஒன்றை கட்டி வருவது தெரிய வந்துள்ளது. இதுவரை ராஞ்சியில் தோனியின் பெயரில் 3 வீடுகள் இருக்கின்றன.
தற்போது 4வது வீட்டை தோனி கட்டி வருகிறார். தோனியின் முதல் வீடு மெகான் ஸ்டேடியம் எதிரில் உள்ள மெகான் குவார்ட்டர்ஸில் இருக்கிறது. அங்குதான் தோனி சிறுவயதில் வாழ்ந்தார். அந்த வீடு பூட்டி இருந்தாலும், தோனியின் ரசிகர்கள் பலரும் அந்த வீட்டின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதன்பின் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து நிரந்தர வீரராக மாறிய பின், செளர்யா என்ற பெயரில் பங்களாவை கட்டினார். ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை தோனியின் குடும்பத்தினர் இந்த வீட்டிலேயே இருந்தனர். இந்த வீட்டின் சுவரில் தோனியின் பெயர் மற்றும் ஜெர்சி நம்பரும் எழுதப்பட்டிருக்கும். 2007 உலகக்கோப்பை தொடர் தோல்விக்கு பின் இந்த வீடு ரசிகர்களால் தாக்கப்பட்டது.
தற்போது தோனி ராஞ்சி ரிங் ரோடு பகுதியில் உள்ள கைலாஷ் பார்வத் பண்ணை வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த வீட்டில் தோனிக்கு என்று பிரத்யேக ஒரு வீடும், பைக் மற்றும் ஸ்விம்மிங் பூல் ஆகியவையும் உள்ளது. அதேபோல் பேட்மிண்டன் அரங்கும் வைத்திருக்கிறார். தற்போது புதிதாக ராஞ்சியின் சிம்பா பகுதியில் புதிய வீடு ஒன்றை தோனி கட்டி வருகிறார்.
தோனியின் பண்ணை வீட்டில் இருந்து 2 கிமீ தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நகரில் இருந்து கொஞ்சம் வெளிப் பகுதியில் வீடு அமைந்திருப்பதால், தோனியின் வாழ்க்கைக்கு சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் தோனி வெளியில் சென்று வருவதற்கும் இந்த பகுதி சாதகமாக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த வீட்டை கூடுதல் வசதிகளுடன் கட்ட தோனி முடிவு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications