தோனி உடனான உறவு என்றென்றும் தொடரும்.. சிஎஸ்கே அணியில் இருந்து எங்கும் விடமாட்டோம்.. காசி விஸ்வநாதன்!
சென்னை: சிஎஸ்கே ஜாம்பவான் தோனி ஓய்வுக்கு பின்னரும் சென்னை அணியில் தொடர்வார் என்று அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி கட்டாயம் விளையாடுவார் என்று கூறிய காசி விஸ்வநாதன், விரைவில் மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் சிஎஸ்கே அணி முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அதன்பின் ஐபிஎல் தொடரும் தொடங்கப்படவுள்ளது. கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. கடந்த சீசனில் சில சீனியர் வீரர்கள் மீது செய்யப்பட்ட முதலீடுகள் தவறாக முடிந்தது. இதனால் இம்முறை அதிகளவில் இளம் வீரர்கள் மீது முதலீடு செய்யப்பட்டுள்ளது.

டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் வீரர்கள் சிஎஸ்கே அணிக்குள் வந்துள்ளனர். அதேபோல் ஒரேயொரு சீனியர் வீரராக தோனி மட்டுமே இருக்கிறார். இதனால் தோனியின் கடைசி சீசனாக இது பார்க்கப்படுகிறது. இதனை பயிற்சியாளார் ஸ்டீபன் ஃபிளமிங்கும் மறைமுகமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதனால் தோனி முழு சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசுகையில், வரும் காலங்களில் சிஎஸ்கே அணி பல்வேறு வகையான கிரிக்கெட் லீக்குகளில் முதலீடு செய்ய உள்ளது. இப்போது எங்களின் முதல் இலக்காக மகளிர் கிரிக்கெட் உள்ளது. அதன்பின் வெவ்வேறு விளையாட்டுகளிலும் சிஎஸ்கே அணியின் முதலீடுகள் இருக்கும்.
அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகமும், வீரர்களும் தொடக்கம் முதலே வித்தியாசமாக சிந்திப்பவர்கள் தான். கிரிக்கெட் வீரர்கள் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும் என்பதை நன்றாக அறிவோம். அதனை தொடக்கம் முதலே செயல்படுத்தியும் வருகிறோம். சிஎஸ்கே அணியை வடிவமைத்ததில் தோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதனால் இந்த சீசனில் தோனி நிச்சயமாக விளையாடுவார்.
ஓய்வுக்கு பின்னரும் சிஎஸ்கே அணியில் தொடர்வார் என்று தெரிவித்துள்ளார். இதனால் தோனி இம்பேக்ட் பிளேயராக சில போட்டிகளிலும், விக்கெட் கீப்பராக சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகளிலும் ஆடுவார் என்று தெரிகிறது. மேலும் சஞ்சு சாம்சனும் சில போட்டிகளில் விக்கெட் கீப்பர் செய்வது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications