தோனி ஒரு வீரருக்காக காத்திருக்கிறார்.. சிஎஸ்கே அணியில் இத்தனை ஆண்டுகள் நீடிக்க அதுவே காரணம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிஎஸ்கே அணிக்காக ஆடிவிட்டு வந்த டிவால்ட் பிரெவிஸ்ஸிடம் கேட்ட போது, அவரால் தோனியை பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை என்று தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். தோனி இனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக இருந்து வீரர்களை வழிநடத்த வேண்டும் என்று கூறிய டிவில்லியர்ஸ், தோனியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் சூழலில், சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் கடந்த இரு சீசன்களாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. இந்த சீசனில் தோனியின் இடத்தை நிரப்ப சஞ்சு சாம்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தோனிக்கும் இது கடைசி சீசனாக அமைந்திருக்கிறது.

MS Dhoni

ஏற்கனவே சிஎஸ்கே அணி பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், மார்ச் 22ஆம் தேதி பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால், தோனி தொடர்பான விவாதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் பேசுகையில், தோனியின் வரலாறு என்றென்றும் நிலைத்திருக்கும்.

சிஎஸ்கே அணியில் தோனியின் இருப்பை உலகம் உணர்ந்து கொண்டே இருக்கும்.. கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக டிவால்ட் பிரெவிஸ் விளையாடிவிட்டு தென்னாப்பிரிக்கா வந்தார். அப்போது அவருடன் சிறிது நேரம் உரையாடினேன்.. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பிரெவிஸ்ஸால் தோனியை பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பிரெவிஸ்ஸை இன்ப்ளூயன்ஸ் செய்துவிட்டார்.

கிரிக்கெட்டை பற்றி அத்தனை நுணுக்கங்களும், தெளிவும், அறிவும் கொண்ட குரு போல் தோனி சிஎஸ்கே அணிக்கு இருக்கிறார். உலகின் அத்தனை டிராபிகளையும் வென்றிருக்கிறார். அவரை போன்ற ஒரு மனிதருடன் இருக்கும் போது ஒவ்வொரு நொடியும் கொண்டாட்டமாக இருக்கும். இந்த சீசனில் தோனி ஒரு ஆலோசகராக இருக்கலாம் என்பதே என்னுடைய கருத்து.

தற்போதைய சிஎஸ்கே அணியில் தோனிக்கு இடமில்லை.. 4, 5 மற்றும் 6 ஆகிய இடங்கள் தோனிக்கானது. ஆனால் இப்போதைய ஃபார்மில் தோனி அப்படி விளையாடுவாரா என்பது தெரியாது. அதனால் அவரது இடத்தை வேறு வீரர்களுக்கு கொடுக்கலாம். தோனி ஒரு ஆலோசகராக இளம் வீரர்களை தயார் செய்ய வேண்டும். ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சரியாக வீரர்கள்.

தோனியின் இடத்தை அவர்கள் இருவரும் எடுத்து செல்ல வேண்டும். தோனி சிஎஸ்கே அணியில் நீடிப்பதற்கு வேறு ஒரு வீரர் வந்து அவரின் இடத்தை எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான். சரியான வீரருக்காக தோனி காத்திருக்கிறார். அதேபோல் தோனி மீண்டும் விளையாடினால், அவர் அழுத்தத்தை எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்று யோசிக்க தொடங்கிவிடுவார் என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+