IND VS NZ Final: 2023 உலககோப்பை பைனல் போல்.. நேரில் பார்க்கும் பிரதமர் மோடி? நிலவரம்
அகமதாபாத்: டி20 உலககோப்பை பைனல் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் மோத உள்ளன. இந்நிலையில் தான் போட்டியை காண பிரதமர் மோடி செல்கிறாரா? இல்லையா? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் தகுதி பெற்றுள்ளன. முதலில் நடந்த அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்தது.

அதன்பிறகு மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி பைனலுக்கு என்ட்ரி கொடுத்தது.
இதையடுத்து இன்று பைனல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெல்லும் அணி டி20 உலககோப்பையை வெல்லும் என்பதால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தற்போது இந்தியா நடப்பு சாம்பியனாக உள்ளது. இதனால் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க இந்திய அணி போராடும். அதேபோல் கடந்த 2 ஐசிசி தொடர்களையும் வென்ற இந்தியா டி 20 உலககோப்பையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.
அதேவேளையில் முதல் முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வெல்ல நியூசிலாந்து ஆர்வமாக உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் ரசிகர்கள் ஆர்வமாகி உள்ளனர்.
இந்நிலையில் தான் இன்றைய போட்டி பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடக்கிறது. பொதுவாக ஐசிசியின் முக்கிய போட்டிகளை பிரதமர் மோடி நேரில் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இந்த போட்டியையும் பிரதமர் மோடி நேரில் பார்க்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. ஈரான் போர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவற்றால் பிரதமர் மோடி நேரில் வந்து போட்டியை ரசிப்பதற்கான வாய்ப்பு குறைவானதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னதாக, கடந்த 2023 ல் 50 ஓவர் உலகக் கோப்பை பைனல் அகமதாபாத்தில் நடந்தது. அப்போது ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்து கோப்பையை நழுவவிவட்டது. இந்த போட்டியை பிரதமர் மோடி மைதானத்திற்கு வந்து பார்த்தார். தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்களை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications