"அந்த" ஒரு விதி.. தோனி விளையாடுவது உறுதி! ஆனா மும்பை உட்பட மற்ற அணிகளுக்கும் ஜாக்பாட் அடிச்சு இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச போட்டிகளில் 5 ஆண்டுகள் விளையாடாமல் இருக்கும் ஒருவரை அன்கேப்ட் வீரராகத் தக்க வைக்க முடியும் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் தோனி அடுத்தாண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடப் போவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், இந்த விதி சிஎஸ்கேவை தாண்டி பல அணிகளுக்குப் பயன்படும் என்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

ஐபிஎல் தொடருக்கு எந்த அணி எத்தனை வீரரைத் தக்கவைக்கலாம்.. இதற்கான ரூல்ஸ் என்ன என்பது குறித்தே கடந்த சில மாதங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

ipl 2025 chennai super kings ms dhoni 2025

விதிகள்: இப்போது ஒரு வழியாக இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. அதன்படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 6 வீரர்களைத் தக்க வைக்கலாம். அதில் ஒருவர் கட்டாயம் அன்கேப்ட் வீரராக இருக்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்கள் மட்டும் அன்கேப்ட் வீரர் இல்லை. கடைசி 5 ஆண்டுகளில் யார் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை என்றாலும் அவர்கள் அன்கேப்ட் வீரராகக் கருதப்படுவார்கள்.

இதன் மூலம் தோனியை அன்கேப்ட் வீரராகத் தக்க வைக்க முடியும். இருப்பினும், இந்த புதிய ரூல் சிஎஸ்கே மட்டுமின்றி வேறு சில அணிகளுக்கும் மிகப் பெரியளவில் உதவும் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா. குறிப்பாக இந்த அன் கேப்ட் வீரர் ரூல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும் கை கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏன் முக்கியம்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்த அன் கேப்ட் வீரர் ரூல் வேண்டும் எனப் பல அணிகள் வலியுறுத்தியதாகவே தெரிகிறது. சரி ஏன் இந்த ரூல் அவர்களுக்குத் தேவைப்படுகிறது எனக் கேட்கிறீர்களா? ரொம்ப சிம்பிள்.. வெறும் ரூ.4 கோடியில் ஒரு வீரரைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இது அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் மிகச் சிறியது என்பதால் ஏலத்தில் கூடுதலாகச் செலவு செய்யும் வாய்ப்பை இது தருகிறது.

நீங்கள் ஐந்து வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ரூ. 75 கோடி செலவிட வேண்டும். அதேநேரம் ஆறாவது வீரரையும் தக்க வைக்க விரும்பினால் கூடுவதாக ரூ. 4 கோடி செலவு செய்தால் போதும். இந்த கேப்ட் பிளேயர் ரூல் தோணிக்காகக் கொண்டு வரப்பட்டதாகவே பலரும் சொல்கிறார்கள். ஆனால், இது ஏதோ புதிய ரூல்ஸ் எல்லாம் இல்லை. கடந்த 2008 முதல் 2021 வரை ஏற்கனவே இருந்த விதி தான் இது. இதை யாரும் பயன்படுத்தவில்லை என்பதாலே இதை நீக்கிவிட்டனர். இப்போது இதை மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

எல்லா டீம்களுக்கும் பலன்: இந்த விதியால் பெரியளவில் பயன் பெறப் போவது சிஎஸ்கே தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் சிஎஸ்கே அணியைத் தாண்டி வேறு சில அணிகளும் இதில் பயன் பெறும். குறிப்பாக பியூஷ் சாவ்லா, மோகித் ஷர்மா, சந்தீப் ஷர்மா, விஜய் சங்கர், கரண் ஷர்மா மற்றும் மயங்க் மார்கண்டே எனப் பலரை இந்த விதியின் கீழ் தக்க வைக்க முடியும். பஞ்சாப் கிங்ஸ் கூட ஷஷாங்க் சிங் இந்த விதியின் கீழ் தக்க வைக்கலாம்.

ஒவ்வொரு அணியிலும் இதுபோன்ற ஒரு வீரர் இருப்பதை இப்போது தான் பல்வேறு அணிகளும் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாகவே சிஎஸ்கே இதை முன்மொழிந்த உடன் அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+