இந்தியாவுடன் விளையாட மாட்டோம்.. சீரியஸா பேசி ட்ரோலுக்குள்ளாகும் பாகிஸ்தான் பிரதமர்! அடக்கொடுமையே
இஸ்லாமாபாத்: டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 7 ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் உறுதி செய்துள்ளார். ஆனால் அதற்காக அவர் சொன்ன விஷயத்தை தான் தற்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர்.
உலககோப்பை டி20 போட்டி வரும் 7 ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டியை இந்தியா, இலங்கை நாடுகள் சேர்ந்து நடத்துகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் 4 குரூப்பாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குரூப்பில் 5 அணிகள் இடம்பெற்றுள்ளது.

இதில் குரூப் ‛டி'- யில் இடம்பெற்ற வங்கதேசம் அணி உலககோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதலை கண்டித்து ஐபிஎல்லில் கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதுகாப்பு காரணத்தை முன்வைத்துவம் வங்கதேசம் டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலகியது. அதற்கு பதில் ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது.
பின்வாங்கிய பாகிஸ்தான்
இதன் தொடர்ச்சியாக வங்கதேசத்துக்கு ஆதரவாக உலகக்கோப்பை தொடரை புறக்கணிப்பதாக கூறிய பாகிஸ்தான் கூறியது. அதன்பிறகு சரணடைந்துள்ளது. ஐசிசி கொடுத்த வார்னிங்கிற்கு அடிபணிந்துள்ளது. உலககோப்பை போட்டியில் விளையாடுவதாக அறிவித்துள்ளது.
இந்தியா போட்டி புறக்கணிப்பு
இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடமாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவும், பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. பிப்ரவரி 15ல் கொழும்பு மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளது. இந்நிலையில் தான் அந்த போட்டியை புறக்கணிப்போம். இந்தியாவுக்கு எதிராக விளையாடமாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர்
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவை கூட்டத்தில் உறுதி செய்துள்ளார். அந்த கூட்டத்தில் ஷெபாஸ் ஷெரீப் ‛‛ஐசிசி ஆண்களுக்கான டி20 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது. இந்த முடிவை நாம் தெளிவாக எடுத்துள்ளோம். விளையாட்டில் அரசியலில் இருக்க கூடாது. இந்த முடிவை நாம் முக்கியமாக கருதி எடுத்துள்ளோம். ஏனென்றால் இது தேவையான ஒரு முடிவாகவும் இருக்கிறது'' என்று பேசினார்.
கிண்டல்
ஷெபாஸ் ஷெரீப் இப்படி சீரியஸாக பேசியதை நெட்டிசன்கள் இணையதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். பயங்கரவாதத்தை வளர்த்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தான் கிரிக்கெட்டில் அரசியலை கலக்கிறது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
மேலும் டி20 உலககோப்பை தொடரை புறக்கணிப்பதாக சவடால் விட்ட பாகிஸ்தான் இப்போது மண்டியிட்டுள்ளது. இன்னும் பாருங்கள்.. ஐசிசி கொடுக்கும் வார்னிங்கில் அலறியடித்து இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்கும் என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.
ட்ரோல்
இன்னொரு தரப்போ எப்படி இருந்தாலும் இந்தியாவை எதிர்த்து விளையாடினால் தோல்வி தான். அதற்கு பதில் விளையாடாமலே போகலாம் என்று பாகிஸ்தான் நினைத்து இருக்கலாம் என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications