ஒரே போட்டி.. 4 ஓவரில் 11 டாட் பால், 2 விக்கெட்.. குல்தீப் யாதவிற்கு செக் வைத்த ரவி பிஷ்னாய்!
கவுகாத்தி: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் 4 ஓவர்கள் வீசி 2 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவிற்கு செக் வைத்திருப்பதாக ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னாய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரவி பிஷ்னாயை பொறுத்தவரை சுமார் ஓராண்டுக்கு பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஓய்வுக்கு அனுப்பப்பட்டதால், பிசிசிஐ ரவி பிஷ்னாய்யை தேர்வு செய்தது. இந்தப் போட்டியிலும் கூட வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இதனால் ரவி பிஷ்னாய் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். பவர்பிளேவிலேயே ரச்சின் ரவீந்திரா அடித்த ஷாட்டை அபாரமாக ஓடி சென்று கேட்ச் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து 5வது ஓவரிலேயே ரவி பிஷ்னாய் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். பிலிப்ஸ் போன்ற வலிமையான பேட்ஸ்மேன் இருந்த போதும், ஒரு ரன் மட்டுமே அந்த ஓவரில் விட்டுக் கொடுத்தார்.
பின்னர் 8வது ஓவரை வீச அழைக்கப்பட்ட அவர் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்பின் 12வது ஓவரை வீச வந்த போது 4 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்ததோடு, சாப்மேன் விக்கெட்டையும் கைப்பற்றினார். தொடர்ந்து 16வது ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 9 ரன்களை விட்டுக் கொடுத்து அதிரடி வீரர் பிலிப்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதனால் ரவி பிஷ்னாய் 4 ஓவரில் வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த 4 ஓவர்களில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே விட்டுக் கொடுத்ததோடு, 11 டாட் பால்களையும் வீசியுள்ளார். ரவி பிஷ்னாய்க்கு இந்தப் போட்டி மிகச்சிறந்த கம்பேக் போட்டியாக அமைந்துள்ளது. அதேபோல் மோசமான பவுலிங் செய்து வரும் குல்தீப் யாதவிற்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications