இனி விராட் கோலியே அவுட்டானாலும் கவலை இல்லை.. பிளே ஆஃப் ஸ்பெஷலிஸ்ட் ரஜத் பட்டிதார் இருக்காரு!
மும்பை: ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பிளே ஆஃப் ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாக உருவாகி இருக்கிறார். இதுவரை பிளே ஆஃப் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ரஜத் பட்டிதார் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 338 ரன்களை குவித்துள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் முதல் போட்டியில் குஜராத் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கேப்டன் ரஜத் பட்டிதார் அமைந்துள்ளார். சிறப்பாக ஆடிய ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 9 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 93 ரன்களை விளாசி தள்ளினார். ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வரலாற்றில் ரஜத் பட்டிதாரின் ஆட்டம் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் ரஜத் பட்டிதாரை பிளே ஆஃப் ஸ்பெஷலிஸ்ட் என்று கொண்டாடி வருகின்றனர்.
2022 எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக 54 பந்துகளில் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 112 ரன்கள்* விளாசி, ஐபிஎல் ப்ளே-ஆஃப்ஸில் சதமடித்த அன்-கேப்டு (Uncapped) வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். தொடர்ந்து குவாலிஃபையர் 2வது போட்டியில் 42 பந்துகளில் 58 ரன்களை விளாசினார். இதன்பின் 2024 சீசனின் எலிமினேட்டர் போட்டியில் 22 பந்துகளில் 34 ரன்களை குவித்தார்.
அதேபோல் 2025 குவாலிஃபையர் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான 8 பந்துகளில் 15 ரன்களையும், இறுதிப் போட்டியில் 16 பந்துகளில் 26 ரன்களையும், தற்போது 33 பந்துகளில் 93 ரன்களையும் குவித்துள்ளார். இதன் மூலமாக 6 இன்னிங்ஸில் 338 ரன்களை ரஜத் பட்டிதார் விளாசி இருக்கிறார். இதன் மூலமாக பிளே ஆஃப் சுற்றில் ரஜத் பட்டிதாரின் சராசரி 112.66ஆக உள்ளது.
பிளே ஆஃப் சுற்றில் மட்டும் ரஜத் பட்டிதார் 25 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்சர்களையும் விளாசி இருக்கிறார். ஐபிஎல் பிளே போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஜத் பட்டிதார் 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். முதலிடத்தில் ரெய்னா, 2வது இடத்தில் தோனி, 3வது இடத்தில் பொல்லார்ட் ஆகியோர் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications