10 மேட்சில் செய்யாத தவறு.. இந்தியாவிற்கு எதிராக திரும்பியதே இதுதான்.. போட்டு உடைத்த ரிக்கி பாண்டிங்
சென்னை; இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விளக்கம் அளித்துள்ளார்.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடியும் கூட தோல்வி அடைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்து எல்லா போட்டிகளிலும் சிறப்பாக ஆடி 10 போட்டிகளை இந்தியா வென்றது.
ஆனால் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்தியாவின் சிறப்பாக உலகக் கோப்பை டீம்.. ஒருநாள் அணிகளிலேயே சிறப்பான டீம் என்று எல்லாம் இந்தியாவின் இந்த அணி பாராட்டப்பட்டது.
ஆனாலும் பைனல் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது. நாக் அவுட் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவிடம் வேறு விதமான ஆக்ரோஷ பலம் இருக்கும். இதை எதிர்கொள்ள முடியாமல் நேற்று ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

ரிக்கி பாண்டிங் பேச்சு; இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விளக்கம் அளித்துள்ளார். அதில், நேற்று பிட்ச் சாதாரணமாக ஆசிய துணைக் கண்ட பிட்ச் போலத்தான் இருந்தது. பிட்ச் தயாரிப்பானது இந்தியாவிற்கு எதிராகவே திரும்பிவிட்டது. இந்திய அணி வலுவாக இருந்தது. ஆனால் பிட்ச் தயாரிப்பு இந்தியாவிற்கே எதிராக முடிந்துவிட்டது.
இந்திய அணியிடம் மிகவும் புத்திசாலித்தனமான சிந்தனைக் குழு இருந்தது. இந்தியா 320 அடிக்கும் வலுவான அணி என்று நான் நினைக்கவில்லை, அவர்கள் 280 ரன்கள் அடிக்கும் அணி. ஆனால் நேற்று அவர்கள் மோசமாக பிட்சை உருவாக்கி தவறு செய்துவிட்டனர்.
( ப்பா மனசுல நின்னுட்டாரே.. தங்கம் சார்.. மேட்ச் முடிந்ததும் கம்மின்ஸ் செய்த செயல்.. என்ன மனுஷன்யா!)
சிராஜ் தேர்வு: நீங்கள் சிராஜுடன் ஆட விரும்பவில்லை என்றால், அவரை ஏன் ஆட வைக்க வேண்டும்? போட்டியின் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட ஒன்றை ஏன் மாற்ற வேண்டும்? 10 ஆட்டங்களுக்குப் பிறகு, ஏன் மாற்ற வேண்டும். பவர் பிளேவில் இத்தனை காலம் சிராஜ் பவுலிங் செய்தார்.
அதை ஏன் இப்போது மாற்றினீர்கள்? இப்போது ஏன் சோதனை முயற்சியில் இறங்க வேண்டும்? சிராஜை அப்படி என்றால் இறக்கி இருக்கவே கூடாதே. அஸ்வினை இறக்கி இருக்க வேண்டுமே? இந்தியா இன்னும் ஒரு சிறந்த அணிதான் - ஆனால் ஆடுகளம் ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவாக மாறிவிட்டது. இதுதான் சிக்கல் என்று ரோஹித் சர்மாவின் முடிவுகளை ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்தார்.

கிரிஸ் ஸ்ரீகாந்த் : : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தோல்விக்கு இன்று கிரிஸ் ஸ்ரீகாந்த் முக்கியமான சில காரணங்களை கூறினார். இந்திய அணி பவுலிங் செய்யும் போதே கிரிஸ் ஸ்ரீகாந்த் தோல்விக்கான காரணங்களை அடுக்கினார். அதில், ரோஹித் சர்மா ஸ்லிப் வைக்காமல் ஆடுகிறார். லெப்ட் ஹேண்ட் பவுலர் வரும் போது ஸ்லிப் முக்கியம். ஆனால் அதை வைக்கவில்லை.
சிராஜுக்கு ஓவர் கொடுத்த மிடில் ஓவர்களில் ஜடேஜாவை கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் ரோஹித் அதை செய்யவில்லை. இது பெரிய தவறு. ஆட்டத்தை 40 ஓவருக்கு மேல் கொண்டு செல்ல ரோஹித் நினைக்க கூடாது. 40 ஓவருக்கு முன் முடிக்க வேண்டும். ஆனால் ரோஹித் இதை செய்யவில்லை. அணியில் ரோஹித் சர்மா, சிராஜை எடுத்திருக்கவே கூடாது. முகமது சிராஜ் ஆடியதற்கு பதில் அஸ்வின் இறங்கி இருக்க வேண்டும்., என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications