3 இன்னிங்ஸில் வெறும் 61 ரன்கள்.. ரோகித் சர்மாவின் சொதப்பல் ஃபார்ம்.. கம்பீர் எடுக்கப்போகும் முடிவு!
இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா 3 இன்னிங்ஸில் வெறும் 61 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இந்த 3 இன்னிங்ஸிலும் ரோகித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காததால், கம்பீர் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்களை குவித்துள்ளது. வாழ்வா சாவா போட்டி என்பதால், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

வழக்கமாக தொடக்கத்திலேயே அதிரடி காட்டும் ரோகித் சர்மா, இந்த இன்னிங்ஸில் நிதானம் காட்டினார். ரோகித் சர்மாவுக்கு பெரிதாக கனெக்ட் ஆகாத சூழலில், நியூசிலாந்து பவுலர்கள் ஃபுல்லர் லெந்தில் மட்டுமே பந்துவீசி வந்தனர். இதனால் தடுமாறிய ரோகித் சர்மா 13 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது ரோகித் சர்மா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா 3 இன்னிங்ஸிலும் சேர்த்தே 61 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை ரோகித் சர்மா கைப்பற்றினார். தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் நியூசிலாந்து ஒருநாள் தொடர் ரோகித் சர்மாவுக்கு மோசமான தொடராக அமைந்துள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசுவதில்லை. இருவரில் ரோகித் சர்மாவை ஓய்வுக்கு செல்ல மறைமுகமாக தேர்வுக் குழு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனாலும் ரோகித் சர்மா மீண்டும் பழைய ஃபிட்னஸ் உடன் கம்பேக் கொடுத்திருந்தார்.
இந்த ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா ஃபார்மின்றி ரன்களை சேர்க்க முடியவில்லை. இதன்பின் டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடர் ஆகியவை நடக்கவுள்ளது. இதனால் கம்பீர் ரோகித் சர்மா தொடர்பாக ஏதேனும் ஒரு முடிவை எடுப்பார் என்று விவாதம் நடந்து வருகிறது. இது ஹிட்மேன் ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகி இருக்கிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications