சர்ஃபராஸ் கான் கதை ஓவர்.. பிரசாந்த் வீரை பிளேயிங் XIல் சேர்க்கும் சிஎஸ்கே.. ருதுராஜ் எடுத்த முடிவு!
சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சர்ஃபராஸ் கான் தொடர்ச்சியாக சொதப்பி வரும் சூழலில், அவரை இம்பேக்ட் பிளேயராக கூட சேர்க்க வேண்டாம் என்று சிஎஸ்கே அணி முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வி உட்பட 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. மும்பை அணியை பொறுத்தவரை 8 போட்டிகளில் விளையாடி 6 தோல்வி, 2 வெற்றி உட்பட 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 9வது இடத்தில் இருக்கிறது.

மும்பை அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு முடிவுக்கு வரும். சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே, பிளே ஆஃப் வாய்ப்பு தொடர்பாக யோசிக்கவே முடியும். சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு வந்துவிட்டார். இதனால் சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடியை நம்பி மட்டுமே சிஎஸ்கே அணியின் பேட்டிங் உள்ளது. டிவால்ட் பிரெவிஸ், சர்ஃபராஸ் கான் மற்றும் சிவம் துபே ஆகிய மூவரும் மோசமான ஃபார்மில் இருக்கின்றனர்.
டிவால்ட் பிரெவிஸ் இன்னும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. சிஎஸ்கே அணி 3 வெற்றிகளையும் பவுலர்களை கொண்டே வென்றிருக்கிறது. கடந்த போட்டியில் முதல் பேட்டிங்கின் போதே சர்ஃபராஸ் கானை இம்பேக்ட் பிளேயராக விளையாடி மோசமான மாற்றத்தை செய்தது. அதேபோல் சர்ஃபராஸ் கானும் தொடக்கத்தில் இருந்த ஃபார்மில் இன்னும் இல்லை.
இதனால் இன்றைய ஆட்டத்தில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக கார்த்திக் சர்மா அல்லது பிரசாந்த் வீர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் சர்ஃபராஸ் கான் ஃபீல்டிங்கில் கொடுக்கும் எனர்ஜி வேறு எந்த சிஎஸ்கே அணி வீரராலும் ஈடு செய்ய முடியவில்லை. இதனால் அவரை ஃபீல்டிங்கில் கொண்டு வர வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications