சச்சின் டெண்டுல்கர் சாதனையை நெருங்கிவிட்ட ஜோ ரூட்.. ஆஷஸ் தொடரில் நடந்த அதிரடி சம்பவம்!
மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் பிரம்மாண்ட சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட்டிற்கு அமைந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜோ ரூட், தனது 67வது அரைசதத்தை நிறைவு செய்து அசத்தி இருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எட்டிப்பிடிப்பது என்பதே பல வீரர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருக்கும். ஏனென்றால் 24 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், 68 அரைசதங்கள் உட்பட 15,921 ரன்களை விளாசி இருக்கிறார்.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எட்டிப்பிடிக்க இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட்டுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின் வந்த கிராலி 16 ரன்களிலும், பென் டக்கெட் 27 ரன்களிலும், பெத்தல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் கூட்டணி இணைந்தது. சிறப்பாக ஆடிய ஜோ ரூ5ட் 103 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 72 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் அடிக்கும் 67வது அரைசதம் இதுவாகும்.
இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பால் சாதனையை முறியடித்திருக்கிறார். சச்சினின் 68 அரைசதங்கள் சாதனையை சமன் செய்ய, இன்னும் ஒரேயொரு அரைசதம் அடித்தாலே போதுமானது.
அதேபோல் ஜோ ரூட் இந்தப் போட்டியில் இன்னொரு சாதனையையும் படைக்க வாய்ப்பு அமைந்துள்ளது. 163 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜோ ரூட், இதுவரை 13,849 ரன்களை விளாசி இருக்கிறார். இந்தப் போட்டியில் இன்னும் 151 ரன்களை எடுத்தால், 14 ஆயிரம் ரன்களை எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைக்க முடியும். இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications