பாதாளத்தில் சிஎஸ்கே பிராண்ட் வேல்யூ.. சஞ்சு சாம்சனை வாங்க இதுதான் காரணம்.. தோனி வியூகமே தனி ரகம்!
மும்பை: கடந்த 2 நாட்களாகவே சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஏனென்றால் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை டிரேட் மூலமாக சிஎஸ்கே அணிக்கு வந்துள்ளார். இந்த டிரேட் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பலரும் பொதுவெளியில் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த டிரேட்டுக்கு பின்னணியில் உள்ள காரணத்தை பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஆடி வந்த ஹர்திக் பாண்டியாவை திடீரென மும்பை அணி டிரேட் மூலமாக வாங்கியது. இதற்காக ரூ.116 கோடி வரை மும்பை அணி நிர்வாகம் செலவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய டிரேட் ஒப்பந்தமாக இது பார்க்கப்பட்டது. தற்போது அதனை மிஞ்சும் வகையில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிரேட் முடிவடைந்திருக்கிறது.

அதாவது சிஎஸ்கே அணிக்காக 12 சீசன்களில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜாவை டிரேடில் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ராஜஸ்தான் அணிக்காக 11 சீசன்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணியிடம் தாரை வார்க்க தயாராகிவிட்டது. இருவருமே மிகப்பெரிய வீரர்கள் என்றாலும், இந்த டிரேட்க்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை வெற்றிகரமான அணிகளில் முதலிடம் சிஎஸ்கே அணிக்குதான். ஏனென்றால் 18 சீசன்களில் 5 முறை கோப்பை வென்றுள்ளதோடு, தொடர்ச்சியாக பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி இருக்கிறது. இதுவரை ஆடிய 16 சீசன்களில் 4 முறை மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அதேபோல் தோனிக்கு நிகரான நட்சத்திர வீரர்கள் இல்லாததால், சிஎஸ்கே அணியின் பிராண்ட் வேல்யூவும் குறைந்துவிட்டது. சிஎஸ்கே அணியை விடவும் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் சிஎஸ்கே அணியை முந்தி சென்றுள்ளனர். இதனால் சிஎஸ்கே அணியில் பிராண்ட் வேல்யூ இருக்கும் வீரரை கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.
ஆனால் பிராண்ட் வேல்யூ இருக்கும் வீரர்கள் யாரும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு வரப் போவதில்லை. ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் இந்திய அணியில் விளையாடும் வீரரை சிஎஸ்கே அணிக்கு கொண்டு வந்தால் சரியாக இருக்கும் என்று சிஎஸ்கே நிர்வாகம் கணக்கு போட்டுள்ளது.
இந்த சூழலில் தான் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களுக்கும் சஞ்சு சாம்சனுக்கும் மோதல் வெடித்துள்ளது. இதனால் சஞ்சு சாம்சன் தன்னை ரிலீஸ் செய்ய கூறிவிட்டார். சஞ்சு சாம்சன் போன்ற பிராண்ட் வேல்யூ மிக்க வீரர் ஏலத்திற்கு வந்தால், அவரின் மதிப்பு உச்சத்திற்கு ஏறிவிடும். இதனால் அவரை மினி ஏலத்திற்கு கொண்டு வராமல், டிரேடில் வாங்க வேண்டும் என்று சிஎஸ்கே முடிவு செய்து காய்களை நகர்த்தியது.
அதேபோல் சஞ்சு சாம்சனுடனும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அவரும் சிஎஸ்கே அணிக்கு மட்டுமே செல்வேன் என்று அடம் பிடிக்க, ராஜஸ்தான் அணி இறங்கி வந்துள்ளது. இதன் மூலமாக தோனியின் இடத்தை சஞ்சு சாம்சனை வைத்து நிரப்ப சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அது சரியான முடிவா என்பதை அடுத்த ஆண்டு வரை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
வைபவ் சூர்யவன்ஷியை இப்படி விமர்சிக்கலாமா.. தரக்குறைவாக பேசிய ஆர்சிபி வீரர்! இதெல்லாம் ஒரு பிரச்சனையா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications