“ஷாஹீன் அப்ரிடி, பாபர் அசாம், ஷதாப் கான்.. இந்த 3 பேரை தூக்குனாதான் டீம் உருப்படும்” - ஷாஹித் அப்ரிடி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: நேற்று கொழும்பில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில், பாகிஸ்தான் மிக மோசமாக இந்தியாவிடம் தோற்றிருந்தது. இந்நிலையில், தனது மருமகன் என்று கூட பாராமல் ஷாஹீன் அப்ரிடியை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அத்துடன் பாபர் அசாம், ஷதாப் கான் ஆகியோரையும் நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2026 குரூப் 'ஏ' போட்டியில், இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

Shahid Afridi

இந்த தோல்வியையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் ஷாஹித் அப்ரிடி, மூத்த வீரர்களான பாபர் அசாம், ஷதாப் கான், ஷாஹீன் ஷா அப்ரிடி போன்றோரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கோரியுள்ளார்.

இந்த தோல்வி காரணமாக சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற, நமீபியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாக வேண்டியது கட்டாயமாகியுள்ளது. பல வாய்ப்புகள் இருந்தும் மீண்டும் மீண்டும் தோல்வியை கொடுத்து ஏமாற்றத்தையே அளித்த மூத்த வீரர்களை நீக்கி, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், தனது மருமகன் ஷாஹீன் உட்பட சிலரை நீக்கச் சொல்லி சமா டிவியில் அப்ரிடி வலியுறுத்தினார்.

அப்ரிடி தனது தனது பேட்டியில் கூறியிருப்பதாவது, "ஷாஹீனை நீக்குங்கள், ஷதாபை நீக்குங்கள், பாபரை நீக்குங்கள். நமீபியாவுக்கு எதிராக புதிய முகங்களை களம் இறக்கி, அவர்களுக்கு நம்பிக்கை வளர்க்க வாய்ப்பு அளியுங்கள். அவர்கள் நீண்டகாலமாக விளையாடுகிறார்கள். எப்போது நாங்கள் அவர்களிடம் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்போதெல்லாம் அவர்கள் அதைச் செய்வதில்லை. இந்த மூத்த வீரர்கள் நாம் விரும்பும் செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என்றால், பெஞ்சில் இருக்கும் இளம் வீரர்களை விளையாட வையுங்கள். என்ன வித்தியாசம் வந்துவிடப் போகிறது?" எனக் காட்டமாகத் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கிடையே, போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் பேசிய பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அலி ஆகா, சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளத்தில் இந்தியா 174 ரன்கள் குவித்ததைக் குறிப்பிட்டார். தங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அன்று 'சிறப்பான நாள் அல்ல' என்றும், திட்டங்களைச் செயல்படுத்துவதில் குறைபாடுகள் இருந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், "எங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை நம்பினோம்; ஆனால் அவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையவில்லை. ஆட்டத்தின் சில பகுதிகளில் திட்டத்தைச் செயல்படுத்துவதில் குறைபாடு இருந்தது. கடந்த 6 மாதங்களாக அவர்கள் சிறப்பாக செயல்பட்டதால், நாங்கள் அவர்களை எப்போதும் நம்புவோம். பேட்டிங்கைப் பொருத்தவரை, நாங்கள் சரியாகத் தொடங்கவில்லை. டி20 போட்டிகளில் பவர்பிளேயில் 3 அல்லது 4 விக்கெட்டுகளை இழந்தால், எப்போதும் பின்னாலேயே துரத்த வேண்டியிருக்கும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+