பாவம் சுப்மன் கில்.. கேப்டனை அவமானப்படுத்திய பிசிசிஐ.. அஜித் அகர்கர், கம்பீர் செய்த துரோகம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்ட செய்தியை சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ தேர்வுக் குழு முறையாக கூட கூறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே டி20 உலகக்கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடருக்காக மனதளவில் சுப்மன் கில் தயாராகி வந்ததாகவும், தற்போது இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதால் சோகத்தில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இருந்து சுப்மன் கில், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான சுப்மன் கில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Shubman Gill

இத்தனைக்கும் இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் இருந்தார். ஆனாலும் ஃபார்ம் பிரச்சனை மற்றும் காம்பினேஷன் காரணமாக சுப்மன் கில்லை தேர்வுக் குழு கழற்றிவிட்டுள்ளது. ஏற்கனவே 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில்லை இந்திய அணி கழற்றிவிட்ட நிலையில், 2வது முறையாக கழற்றிவிடப்பட்டுள்ளார்.

இதனால் சுப்மன் கில்லின் டி20 கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில் சுப்மன் கில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்த தகவல் சுப்மன் கில்லுக்கு முறையாக கூறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த 5வது டி20 போட்டியின் போதே சுப்மன் கில் உடற்தகுதியுடன் இருந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், அதில் விளையாடவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் பிசிசிஐ தரப்பில் எந்த ரிஸ்கும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அகமதாபாத்தில் இருந்து சுப்மன் கில் ஓய்வு எடுக்க வீட்டிற்கு புறப்பட்ட பின்னர் தான், சுப்மன் கில் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் தேர்வுக் குழுவில் இருந்து எந்த நிர்வாகிகளும் அவருக்கு முறையாக கூறவில்லை.

ஏற்கனவே சுப்மன் கில் நியூசிலாந்து டி20 தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மனதளவில் தயாராகி வந்துள்ளார். இதனால் பிசிசிஐ நிர்வாகத்தின் இந்த முடிவு சுப்மன் கில்லுக்கு இடியாக இறங்கியுள்ளது. இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனுக்கே உரிய மரியாதையை கொடுக்காமல் அஜித் அகர்கர் செயல்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+