நான் மெசேஜ் அனுப்பினேனா.. ஒழுங்கா ரூ.100 கோடி எடுத்து வைங்க.. நடிகைக்கு எதிராக பொங்கிய சூர்யகுமார்!
மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியதாக நடிகை குஷி முகர்ஜி பேசிய நிலையில், அவருக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது நடிகை குஷி முகர்ஜி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வருபவர் குஷி முகர்ஜி. அதேபோல் சோசியல் மீடியாவில் பிரபலமான நபராக இருக்கும் குஷி முகர்ஜி, பிரபல மாடலாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ் தொடர்பாக குஷி முகர்ஜி பேசுகையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சூர்யகுமார் யாதவ் எனக்கு தொடர்ச்சியாக ஏராளமான மெசேஜ்களை அனுப்புவார். ஆனால் இப்போது நாங்கள் பெரிதாக பேசிக் கொள்வதில்லை. யாருடனும் இணைத்து என் பெயர் பேசப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் டி20 உலகக்கோப்பை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் மீது நடிகை இப்படியொரு குற்றச்சாட்டை முன் வைத்தது சர்ச்சையாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சூர்யகுமார் - தேவிஷா ஷெட்டி திருமணம் 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் இருவரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர்.
2016ஆம் ஆண்டுக்கு பின் சூர்யகுமார் யாதவ் மீது குஷி முகர்ஜி இப்படி செய்ததாக குற்றம் சாட்டியதும் பேசு பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் குஷி முகர்ஜி மீது சூர்யகுமார் யாதவ் புகார் அளித்துள்ளதோடு, அவதூறு வழக்கையும் தாக்கல் செய்திருக்கிறார். இவரின் வழக்கறிஞர் தரப்பில், குஷி முகர்ஜி மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இது சூர்யகுமார் யாதவின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது.
அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, சிறையில் அடைக்க வேண்டும். அதேபோல் குஷி முகர்ஜி ரூ.100 கோடி அவதூறு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் சூர்யகுமார் யாதவ் மூலமாக குஷி முகர்ஜி தனது புகழுக்காக பயன்படுத்தி இருப்பதாக பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications