சஞ்சு சாம்சன் இல்ல.. 3 வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் கம்பீர்.. மொத்தமாக மாறும் இந்திய பிளேயிங் XI
அகமதாபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இந்த மூவருக்கும் பதிலாக இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெறும் 3 வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு நாளும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. வலிமை வாய்ந்த அணிகளுக்கு பல்வேறு சிறிய அணிகளும் மிகப்பெரிய குடைச்சல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்து ஆஸ்திரேலியா அணி குரூப் சுற்றுடன் வெளியேறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியிடமும் ஆஸ்திரேலியா வீழ்ந்தது.

இந்திய அணியை பொறுத்தவரை சூப்பர் 8 சுற்றில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டது. இருப்பினும் நாளை நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அதன்படி நட்சத்திர வீரர்களான ஹர்திக் பாண்டியா, பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.
சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என்று அடுத்தடுத்து தொடர்ந்து போட்டிகள் இருப்பதால், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரிக்ஸ் எடுக்க விரும்பவில்லை. இதனால் இவர்கள் மூவருக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு, சில வீரர்களை கம்பீர் தயார் செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதன்படி முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
முகமது சிராஜ் அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடப்பதால், முகமது சிராஜ்க்கு எந்த சிக்கலும் இல்லை. ஏனென்றால் குஜராத் அணிக்காக சிராஜ் இந்த மைதானத்தில் தான் ஆடி வருகிறார். அர்ஷ்தீப் சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெஞ்ச் செய்யப்பட்டிருந்தார்.
அதேபோல் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்திய பிளேயிங் லெவனில் ஆஃப் ஸ்பின்னரின் தேவை இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை பாகிஸ்தான் அணியுடன் அரையிறுதியில் மோத வேண்டிய தேவை எழுந்தால், குல்தீப் யாதவை விடவும் வாஷிங்டன் சுந்தரை பிளேயிங் லெவனில் சேர்ப்பது சரியாக இருக்கும்.
இதனால் வாஷிங்டன் சுந்தரை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. மற்றபடி பேட்டிங் லைன் அப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தெரிகிறது. அபிஷேக் சர்மா தொடர்ந்து 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகி இருப்பதால், அவருக்கு கேம் டைம் கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதனால் சஞ்சு சாம்சனுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்காது என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications