15 யார்க்கர் பந்துகள்.. 22 ரன்கள் மட்டுமே சேர்ந்த இங்கிலாந்து.. பும்ராவின் பிளானால் வென்ற இந்திய அணி
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஃபீல்டிங் மற்றும் யார்க்கர் பந்துகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இந்திய அணி மொத்தமாக 15 யார்க்கர் பந்துகளை வீசி 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணி வெறும் 3 யார்க்கர் பந்துகளை வீசி 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருக்கிறது.
டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்களை குவித்தது.

சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்களை விளாசினார். அதேபோல் கடைசி நேரத்தில் வந்த ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 27 ரன்களை குவித்தார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேக்கப் பெத்தல் 48 பந்துகளில் 105 ரன்களை விளாசினார்.
கடைசி 3 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவைப்பட்ட சூழலில், பும்ரா வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அந்த ஓவரில் 6 யார்க்கர் பந்துகளை வீசி இங்கிலாந்தின் அதிரடியை தடுத்து நிறுத்தினார். இதனை அப்படியே ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபேவும் ஃபாலோ செய்தனர்.
மொத்தமாக இந்திய அணியின் வெற்றிக்கு யார்க்கர் பந்துகளும், ஃபீல்டிங்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் இங்கிலாந்து அணி 2 கேட்ச்களை மிஸ் செய்ததோடு, பல்வேறு மிஸ் ஃபீல்டுகளையும் செய்தது. இதனால் 2 ரன்கள் எடுக்க வேண்டிய பந்தில், இந்திய அணிக்கு 4 ரன்கள் கிடைத்தது. ஆனால் இந்திய அணியோ ஃபீல்டிங்கில் புலியாக பாய்ந்தது.
அதிலும் அக்சர் படேல் பிடித்த 2 கேட்சும் ஆட்டத்தையே மாற்றியது என்று சொல்லலாம். 18வது ஓவரில் இங்கிலாந்து வீரர்களால் 2 ரன்களை எடுப்பதே சிரமமாக அமைந்தது. அதேபோல் இந்தப் போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் வெறும் 3 யார்க்கர் பந்துகளை மட்டுமே வீசி இருக்கின்றனர். அதில் இந்திய பேட்ஸ்மேன்கள் 6 ரன்களை சேர்த்திருக்கின்றனர்.
ஆனால் இந்திய அணி மொத்தமாக 15 யார்க்கர் பந்துகளை வீசி இருக்கிறது. அதில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் 22 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்திருக்கிறது. இதனால் டி20 கிரிக்கெட்டின் அடிப்படையை இந்திய அணி பவுலர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications