இந்திய அணியின் தோல்வி உறுதி.. இங்கிலாந்து அணியை பாருங்க.. மீண்டும் வம்புக்கு இழுத்த முகமது ஆமீர்!
மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோற்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங்கில் ஒருவரோ அல்லது இருவரோ மட்டுமே சிறப்பாக விளையாடுவதாக கூறிய முகமது ஆமீர், சூர்யகுமார் யாதவ் எந்த இம்பேக்டையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கவிருப்பதால், ஹை ஸ்கோரிங் ஆட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல் இரவில் நடக்கும் போட்டி என்பதால், பனிப்பொழிவு நிச்சயம் இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

இதனால் டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2வது அரையிறுதியில் எந்த அணி வெல்லும் என்று பலரும் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாது என்று கணித்து பல்பு வாங்கினார்.
தற்போது முகமது ஆமீர் பேசுகையில், வான்கடே மைதானம் நல்ல பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சாகும். ஒருவேளை இங்கிலாந்து அணி 2வது பேட்டிங் செய்தால், அந்த அணியால் வெற்றி பெற முடியும். நிச்சயமாக இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்படும். இந்திய அணியில் ஒரு போட்டியில் 1 அல்லது 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ரன்களை குவிக்கின்றனர்.
அவர்களே அதிக நேரம் களத்திலும் உள்ளனர். மற்ற யாரும் பெரிய ஃபார்மில் இல்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே இஷான் கிஷன் ரன்களை சேர்த்தார். அபிஷேக் சர்மா ஃபார்மில் இல்லை. திலக் வர்மாவால் இன்னும் இம்பேக்ட் இன்னிங்ஸை ஆடவில்லை. சூர்யகுமார் யாதவ் சூப்பர் 8 வரை எந்த இன்னிங்ஸிலும் ரன்கள் சேர்க்கவில்லை.
சஞ்சு சாம்சன் மற்றும் பும்ரா மட்டுமே ஃபார்மில் இருக்கின்றனர். அதனால் இந்திய அணியால் ஆதிக்கம் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் இங்கிலாந்து அணியே வெல்லும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அரையிறுதி ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications