திருமணத்திற்கு தயாரான இஷான் கிஷன்.. அதிதி ஹூண்டியா சேட்டையால் நடந்த சம்பவம்.. குடும்பத்தினர் அப்டேட்
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் மற்றும் அவரது காதலி அதிதி ஹூண்டியா இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியின் போதே இஷான் கிஷன் - அதிதி ஹூண்டியா இணை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன்பின் இந்திய அணி வீரர்கள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நட்சத்திர வீரர் இஷான் கிஷன் தனது நீண்ட நாள் காதலியான அதிதி ஹூண்டியா உடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

சிவப்பு நிற உடையில் மைதானத்திற்குள் வந்த நொடி முதலே ரசிகர்களின் கவனத்தை அதிதி ஹூண்டியா ஈர்க்க தொடங்கிவிட்டார். அப்போது இஷான் கிஷன் - அதிதி இணை ரொமான்ஸில் ஈடுபட, அகமதாபாத் மைதானமே அதிர்ச்சி அடைந்தது. இதன்பின் இஷான் கிஷன் - அதிதி ஹூண்டியா இணையின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின.
இதையடுத்து அங்கிருந்த பல பாலிவுட் நாயகிகளை விடவும் அதிதி ஹூண்டியா கவனம் ஈர்த்துவிட்டதாக ரசிகர்கள் பாராட்டினர். ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அதிதி ஹூண்டியா மாடலிங் துறையில் செயல்பட்டு வருகிறார். 2017ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டி வரை முன்னேறியவர். இதன்பின் 2018ஆம் ஆண்டு மிஸ் டிவா பட்டத்தை வென்றார்.
இதன்பின் தொழில்முனைவோராக இருந்து வரும் அதிதி ஹூண்டியா, இஷான் கிஷனுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவில் இருக்கிறார். 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை கூட அதிதி ஹூண்டியா காண வந்திருக்கிறார். இதனால் இஷான் கிஷன் - அதிதி ஹூண்டியா ஜோடி திருமணம் செய்வார்களா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இஷான் கிஷன் திருமணம் தொடர்பாக அவரின் தாத்தா அனுராக் பாண்டே அப்டேட் கொடுத்துள்ளார். அதில் அனுராக் பாண்டே கூறுகையில், சில நாட்களுக்கு முன்பாக இஷான் கிஷனிடம் திருமணம் எப்போது செய்து கொள்வாய் என்று கேட்டேன்.. உன் திருமணம் வரை நான் உயிருடன் இருப்பேனா தெரியாது என்று புலம்பி கொண்டிருந்தேன்..
அப்போது இஷான் கிஷன், அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்கிறேன்.. உங்களுக்கு ஒன்றும் ஆகாது.. என்னுடைய மகன் வந்து உங்கள் மடியில் விளையாடுவான் என்று பதில் அளித்ததாக தெரிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் அதிதி ஹூண்டியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்வோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications