திலக், ரிங்கு, வாஷிங்டன் சுந்தர்.. உள்ளே வரும் சஞ்சு சாம்சன்.. இந்திய XIல் கம்பீர் செய்யும் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் இந்திய அணி அடுத்த 2 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

T20 World Cup 2026

அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி வென்றாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் சில மாற்றங்களும் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி நம்பர் 3ல் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் திலக் வர்மாவை நீக்க கம்பீர் முடிவு எடுத்திருக்கிறார்.

ஏனென்றால் 5 இன்னிங்ஸில் ஆடியுள்ள திலக் வர்மா 3 இன்னிங்ஸில் தலா 25 ரன்களும், ஒரு இன்னிங்ஸில் 31 ரன்களும், கடந்த போட்டியில் 1 ரன்னும் எடுத்திருக்கிறார். இதனால் இஷான் கிஷனை நம்பர் 3 பேட்டிங் வரிசைக்கு தள்ளிவிடலாம் என்று இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதேபோல் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவருமே இடதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.

இதனால் கடந்த 5 போட்டிகளில் 4 அணிகள் ஆஃப் ஸ்பின்னருடன் பவுலிங்கை தொடங்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் சஞ்சு சாம்சனை மீண்டும் அணிக்குள் கொண்டு வர கம்பீர் ஆலோசித்து வருகிறார். அதேபோல் ரிங்கு சிங்கை நீக்கிவிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் குல்தீப் யாதவை கொண்டு வரலாம் என்றும், வாஷிங்டன் சுந்தர் இடத்தில் அக்சர் படேலை கொண்டு வரவும் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே ரிங்கு சிங்கும் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால், சொந்த ஊருக்கு புறப்பட்டிருக்கிறார். இதனால் இன்றைய பயிற்சியில் ரிங்கு சிங் பங்கேற்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 3 மாற்றங்கள் நடப்பது கிட்டதட்ட உறுதி என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+