கிரிக்கெட் வீரர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. சென்னையில் நாளை செலக்ஷன்.. தேர்வாகும் நபர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான 2ம் கட்ட வீரர்கள் தேர்வுக்கான கிரிக்கெட் போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தேர்வாகும் நபர்கள் ஏலத்தில் பங்கேற்கலாம்.
நம் நாட்டில் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். பலரும் கிரிக்கெட்டை பேஷனாக வைத்து விளையாடி வருகின்றனர். ஐபிஎல், டிஎன்பிஎல் போன்று தமிழகத்தில் தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.

ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையிலும், ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணி வீரர்களின் திறமையை நிரூபிக்கும் வகையிலும் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
எஸ்சிடிஎஃப் ஐ என அழைக்கப்படும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் டெவலப்மென்ட் ஃபெடரேஷன் இந்தியா நடத்தி வருகிறது. இந்த போட்டிக்கான அணி மற்றும் வீரர்கள் தேர்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 2ம் கட்ட தேர்வு என்பது சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிபி இன்ஜினியரிங் கல்லூரியில் நாளை (மார்ச் 22) நடைபெற உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
வீரர்களின் தேர்வை பிசிசிஐ லெவல் பி கோச் மற்றும் என்சிஏ நடுவரான சதீஷ் சடகோபன் மற்றும் என்சிஏ லெவல் ஏ கோச்சாக இருக்கும் பிரேம் ஆனந்த் ஆகியோர் மேற்கொள்ள உள்ளனர். தேர்வாகும் நபர்கள் பிரபலமான 8 அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலத்தில் பங்கேற்கலாம். அதன்பிறகு மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அரக்கோணத்தில் அடுத்தக்கட்ட வீரர்களின் தேர்வு என்பது நடைபெற உள்ளது.
அதாவது இது வீரர்களின் தேர்வுக்கான 3 வது கட்டாகும். இந்த தேர்வு என்பது அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் மெர்க்குரி இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறும். இதில் தேர்வாக விரும்பும் வீரர்கள், அணிகள் தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரிமீயர் லீக் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications