"தல" தோனி சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடுவாரா? சிக்கலாக நடுவே நிற்கும் அந்த ஒரு ரூல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்தினார். இந்த சீசன் முடிந்துவிட்ட போதிலும் அடுத்தாண்டு தோனி தொடர்ந்து விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.. இதற்கிடையே இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்து பல வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் சிஎஸ்கே அணியில் தோனி தொடர்ந்து விளையாடுவாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

Dhoni csk cricket

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்தாண்டு சிஎஸ்கே அணியை ருதுராஜ் கெய்க்வாட் தான் வழிநடத்தினார்.

தல தோனி: இந்தாண்டு சிஎஸ்கே அணி பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்ற போதிலும், ருதுராஜ் கேப்டன்ஷிப்பில் பல பாசிட்டிவ் விஷயங்கள் இருந்ததாகவே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, ருதுராஜ் தான் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருக்கப் போகிறார். அதேநேரம் இந்த சீசன் முடிந்துவிட்ட நிலையில், ஒரு வீரராக தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவி வந்தது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு நமக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.

அதாவது வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகமும் பிசிசிஐயும் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தோனியின் எதிர்காலம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தக்கவைப்பு பாலிசி: அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பு மெகா ஏலம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை மெகா ஏலத்தில் எத்தனை வீரர்களைத் தக்கவைக்க பிசிசிஐ நிர்வாகம் அனுமதிக்கிறது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஒவ்வொரு டீமும் 5 அல்லது 6 வீரர்களைத் தக்கவைக்க அனுமதித்தால் மட்டுமே தோனி தொடர்ந்து ஒரு வீரராக விளையாடுவார் என்று கிரிக்பஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

என் நடக்கும்: இதற்கு முன்பு வரை 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என நான்கு பேரை மட்டுமே தக்கவைக்க முடியும் என விதி இருந்த நிலையில், அது 5 அல்லது 6ஆக உயர்ந்தால் மட்டுமே தோனி தொடர்ந்து விளையாடுவார். ஏனென்றால் தற்போதைய சூழலில் ​​சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா மற்றும் சிவம் துபே ஆகிய 4 பேரை தான் தக்கவைக்கும். 5ஆவது வீரர் ஆப்ஷன் இருந்தால் மட்டுமே தோனியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது தெரியும்: ஐபிஎல் டீம் உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை ஜூலை 31ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் எங்கே, எத்தனை மணிக்கு நடக்கும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை இல்லை. பெரும்பாலும் நாளை பிற்கபலில் இந்தக் கூட்டம் மும்பையில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தக்கவைக்கும் பாலிசி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

5-6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படித் தக்கவைப்பு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டால் தோனி நிச்சயம் சிஎஸ்கே அணியில் ஒரு வீரராகத் தொடர்வார். ஒருவேளை வீரராகத் தொடரவில்லை என்றாலும் கூட ஆலோசகர், மென்டார் என ஏதோ ஒரு வடிவில் சிஎஸ்கே அணியில் தோனி தொடர்ந்து இருப்பார் என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+