ஆரம்பமே ஷாக்.. வென்று கொடுக்க வேண்டிய கோலி அவுட்.. "அந்த" மனநிலையோடு இறங்கினால் இப்படித்தான்.. ப்ச்
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்திய அணியின் மோசமான பேட்டிங்கிற்கு பின் முக்கிய காரணம் உள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. வெற்றி என்பதை தாண்டி குறைந்தபட்சம் ஆட்டத்தை டிரவாவது செய்யுங்கள் என்று இந்திய ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: முதல் இரண்டு நாள் ஆட்டத்தில் ஸ்மித், ஹெட் இருவரும் அதிரடியாக சதம் அடித்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டிற்கு 469 ரன்களை எடுத்தது. ஹெட் 163, ஸ்மித் 121 ரன்களை எடுத்தனர். இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 26 பந்துக்கு 15 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். 15 பந்துக்கு 13 ரன்கள் எடுத்து சுப்மான் கில் அவுட் ஆனார். 25 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து புஜாரா அவுட் ஆனார். 31 பந்துக்கு 14 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய ஜடேஜா 51 பந்தில் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
முதல் இன்னிங்சில் ரஹானே 89, ஜடேஜா 48, ஷர்த்துல் 51 ரன்கள் எடுக்க இந்திய அணி 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: இதையடுத்து மீண்டும் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் சரிய லபுசேன் 41 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் 41, கேரி 66 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணி 270-8 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா 445 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் ரோஹித் சிறப்பான தொடக்கம் கொடுக்க 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தவறாக அவுட் கொடுக்கப்பட்ட கில் 18, புஜாரா 27 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து இறங்கிய கோலி 44 ரன்கள், ரஹானே 20 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த நிலையில் இன்று பேட்டிங்கை தொடர்ந்தனர்.
பேட்டிங் தொடங்கி சில ஓவர்களில் கோலி 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். போலன்ட் ஓவரில் கேட்ச் கொடுத்து இவர் அவுட் ஆனார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜாவும் போலண்ட் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இரண்டு பேருமே அவசரமாக ஆடியதே அவுட் ஆக காரணம். டெஸ்ட் போட்டி என்ற சுயநினைவு இல்லாமல் வேகமாக இவர்கள் பேட்டிங் செய்தது.. ஐபிஎல் ஆடிவிட்டு அதே நினைப்புடன் இவர்கள் மேட்ச் ஆட வந்தது விக்கெட்டிற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போலவே வேகமாக ஆட வேண்டும் என்ற நினைப்புடன் பேட்டிங் செய்தது அப்படியே இவர்களுக்கு எதிராக திரும்பி உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படி மோசமாக சொதப்பவுதற்கு காரணம் ஐபிஎல்தான் என்று கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக சரியான ஓய்வு இல்லாமல் வீரர்கள் ஆடுவது, அதிக பணத்திற்காக பிசிசிஐ தொடர்ந்து வீரர்களை ஆட வைப்பது போன்றவை காரணங்களாக பார்க்கப்படுகிறது. இன்றைய பேட்டிங்கிலும் அது தெள்ளத்தெளிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications