பாகிஸ்தான் வீரர்களில் பெரும் கோடீஸ்வரர் யார் தெரியுமா? இவரா? ஆனாலும் கோலி கிட்ட நெருங்கவே முடியாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலககோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் பெரும் கோடீஸ்வரர் யார்? என்பதும் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதேவேளையில் அந்த வீரர் இந்தியாவின் விராட் கோலி சொத்து மதிப்பின் அருகே கூட நெருங்க முடியாது என்பதும் தெரியவந்துள்ளது.

50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவையும், நேற்று நடந்த 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

Who is the richest cricketer in Pakistan ODI World Cup squad? but he never match to Virat Kohli, details here

அதேபோல் பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியையும், 2வது போட்டியில் இலங்கை அணியையும் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு அடுத்து 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தான் உலககோப்பை கிரிக்கெட்டில் அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்க உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வரும் 14ம் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் கடைசி வரை போராடுவார்கள் என்பதால் போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது. இதனால் இந்த ஹைவோல்டேஜ் மேட்சை பார்க்க இந்தியா-பாகிஸ்தான் மட்டுமின்றி அனைத்து நாட்டு ரசிகர்களும் தயாராக உள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் பெரும் கோடீஸ்வரர் யார்? என்ற தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊதியம் வழங்குகிறது. அதுதவிர அவர்கள் பாகிஸ்தான் பிரிமீயர் லீக் உள்பட வெளிநாடு தொடர்களில் பங்கேற்று சம்பாதிக்கின்றனர். மேலும் விளம்பரம், சமூக வலைதளங்கள் மூலமாவும் வீரர்களுக்கு வருமானம் என்பது கிடைக்கிறது.

நடப்பு உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது பகர் ஜமான், அகா சல்மான், முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மா மிர், ஷகீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ராப், முகமது வாசிப், ஹசன் அலி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தான் உலககோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெரும் பணக்காரராக பாபர் ஆசம் உள்ள தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான பாபர் ஆசம், அனைத்து வகை போட்டிகளிலும் விளையாடி வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் லிஸ்ட் ஏ பட்டியலில் உள்ள அவருக்கு நல்ல சம்பவம் கிடைக்கிறது.

மேலும் பாபர் அசாம் ஓபோ, ஹெட் அன்ட் சொல்டர்ஸ், எச்பிஎல், ஹவாய், கிரெடிட் பக், ப்ரி பயர் உள்ளிட்ட நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். அதோடு அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கிலும் விளையாடி வருகிறார். இதன்மூலம் அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. தற்போதைய சூழலில் பாபர் ஆசமின் சொத்து மதிப்பு என்பது ரூ.40 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் உலககோப்பை கிரிக்கெட்டுக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் அவரே பெரும் கோடீஸ்வரராக உள்ளார்.

இருப்பினும் கூட இந்திய வீரர்களை ஒப்பிடும்போது அவரது சொத்து மதிப்பு என்பது பெரியதாக இல்லை. ஏனென்றால் இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி, முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோரின் சொத்து மதிப்பு என்பது ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ரோகித் ஷர்மாவின் சொத்து மதிப்பும் பாபர் அசாமை விட அதிகமாகும்.

பாபர் அசாம் தற்போது பாகிஸ்தானில் லாகூர் நகரில் குடும்பத்துடன் சொகுசு வீட்டில் வசித்து வருகிறார். பாபர் அசாமிமிடம் ஆடி ஏ5, ஹூண்டாய் சொனாட்டா, பிஏஐசி பிஜே 40 பிளஸ் உள்ளிட்ட கார்கள் உள்ளன. சமீபத்தில் பாபர் ஆசமுக்கு அவரது சகோதரர் ரூ.8 கோடி மதிப்பிலான ஆடி இ-ட்ரான் ஜிடி ஸ்போர்ட்ஸ் காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
******

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+