செமி பைனலுக்கு முன்.. கசிந்த அந்த மெயில்.. இந்திய அணிக்கு எகிறிய பிரஷர்.. ஒரே நடுக்கம்.. ஏன்?
சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டத்திற்கு முன் கசிந்த மெயில் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டம் தொடங்கி உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான மேட்ச் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. 2019 உலகக் கோப்பை செமி பைனலில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா மோசமாக தோல்வி அடைந்தது.
ரிசர்வ் டேயில் நடந்த அந்த ஆட்டத்தில்.. டாப் ஆர்டர் சொதப்பியதால் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. கிரிக்கெட் வரலாற்றில் இந்திய ரசிகர்கள் மறக்க முடியாத நாளாக அது மாறியது.

இந்தியா நியூசிலாந்து மேட்ச்: அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று இந்தியா நியூசிலாந்து இடையிலான செமி பைனல் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் பவுலிங் செய்வது கடினம்.
மாலை நேரத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் பட்சத்தில் முதல் 10 ஓவர்கள் கடினம். சேசிங் செய்வது மிக மிக கடினம். முக்கியமாக டெஸ்ட் மேட்ச் போல மெதுவாக ஆட வேண்டும். இங்கே கடல் காற்று மாலை நேரத்தில் வீசும். இதனால் முதல் இரண்டாவது இன்னிங்சில் 10 ஓவர்கள் பந்து ஸ்விங் ஆகும். மிக மோசமாக பந்து ஸ்டம்பிற்கு வரும். இதன் காரணமாகவே இரண்டாவது இன்னிங்சில் இந்த பிட்சில் ஆடிய அணிகள் எல்லாம் இந்த உலகக் கோப்பையில் மிக கடுமையாக முதல் 10 ஓவர்கள் திணறி உள்ளன. உதாரணமாக இரண்டாவதாக இங்கே பேட்டிங் செய்த ஆண்கள் முதல் பவர் பிளேவில் எடுத்த ரன்கள் பின்வருமாறு.. 67/4, 35/3, 14/6 மற்றும் 52/4.
அணி தேர்வு; இதனால் இன்று டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணிக்கு இது சாதகமாக மாறி உள்ளது. இன்று ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன் ), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை ஆகியோர் உள்ளனர்.
( செமி பைனலுக்கு முன் பிட்சை மாற்றிய பிசிசிஐ.. விவாதத்திற்கு உள்ளான அந்த ஐசிசி விதி! இதுதான் முக்கியம்)
டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம் (வி.கே), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட் ஆகியோர் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.
கசிந்த மெயில்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டத்திற்கு முன் கசிந்த மெயில் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐசிசியில் இண்டிபெண்டண்ட் பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் உள்ளார். அவர்தான் இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை பிட்ச் நம்பர் 6ஐ சோதனை செய்துள்ளார். அவர் ஐசிசிக்கு அனுப்பிய கோபமான மெயில்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம்.

அவருடைய மெயிலில்தான் பிசிசிஐ மீண்டும் பழைய பிட்ச் பயன்படுத்துகிறது என்று புகார் வைத்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இன்று நடக்கும் ஆட்டம் , ஏற்கனவே இரண்டு போட்டிகளை நடத்திய பிட்ச்சில் விளையாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர்தான் ஐசிசியிடம் புகார் வைத்துள்ளார்.
இன்று நடக்க உள்ள அரையிறுதியானது வான்கடே ஸ்டேடியத்தின் பிட்ச் பிளாக்கின் மையப் பகுதியான பிட்ச் 7 இல் விளையாடப்பட வேண்டும் என்று முதலில் கருதப்பட்டது. பிட்ச் 7 என்பது உலகக் கோப்பையின் லீக் கட்டத்தில் பயன்படுத்தப்படாத புதிய பிட்ச் ஆகும். இதில் எந்த லீக் ஆட்டமும் ஆடப்படவில்லை. ஆனால் ஆட்டத்தை திடீரென பிட்ச் 6 க்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த பிட்ச் சற்று மையமாக உள்ளது என்பதால் இது தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம் போட்டியில் ஏற்கனவே இரண்டு போட்டிகளை நடத்திய பிட்ச் ஆகும் இது.
இந்த பிட்சை பிசிசிஐ தேர்வு செய்ததை ஐசிசி இண்டிபெண்டண்ட் பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் விரும்பாமல் மெயில் அனுப்பி உள்ளார். அவர் அனுப்பிய மெயில்தான் பிட்ச் குறித்த சர்ச்சைக்கு காரணம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications