டிசைனை மாற்றுங்க.. பிஸ்லெரி நிறுவனத்தை அடிக்கும் கோலி ரசிகர்கள்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
சென்னை: பிரபல வாட்டர் பாட்டில் நிறுவனமான பிஸ்லெரி நிறுவனத்தை இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். கிண்டல் தாண்டி மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிராக நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் தோல்வி அடைந்தது. அதன்பின் முதல் 7 ஓவர்கள் பவுலிங் சொதப்பியது.

பின்னர் பேட்டிங்கிலும் கொஞ்சம் இந்தியா பயம் காட்டியது. அதை எல்லாம் தாண்டி சீட் நுனியில் அமர வைக்கும் அளவிற்கு திரில்லாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது. 49 ஓவரில் 254-6 ரன்கள் எடுத்து 1 ஓவர் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. அதன்படியே தொடக்கத்தில் பாஸ்ட் பவுலிங்கில் நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. வேகமாக 60 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு பிரஷர் போட்டனர். ஆனால் அதன்பின் வருண் சக்ரவர்த்தி களமிறங்கி.. அவர் ஓவரில் இருந்தே ஆட்டத்தை மாற்றினார். முதல் 2 பந்துகள் விக்கெட் அருகே சென்று.. பின்னர் அதே ஓவரில் 5வது பந்தில் விக்கெட் எடுத்தார்.
இந்தியா வெற்றி
மிடில் ஆர்டரில் டேரில் மிட்செல் 63, மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களை எடுத்து ஆட்டத்தை கொஞ்சம் சரிவில் இருந்து மீட்டனர். இதனால் 50 ஓவரில் நியூசிலாந்து அணி 251/7 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய இந்திய அணியில் இந்த முறை ரோஹித் கவனமாக ஆடினார். பைனல் முக்கியம் என்பதால் பொறுப்பை உணர்ந்து ஆடினார் . 83 பந்தில் 3 சிக்ஸ், 7 பவுண்டரி என்று 76 ரன்கள் எடுத்தார். 105 ரன்கள் வரை இந்திய அணி விக்கெட் இழக்காமல் ஆடியது. ஆனால் அதன்பின் அடுத்தடுத்து 7 ஓவர்கள் கேப்பில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
சுப்மான் கில், 18.4 ஓவரில் அவுட் , விராட் கோலி, 19.1 ஓவரில் அவுட்.), ரோஹித் சர்மா, 26.1 ஓ. என்று 7 ஓவரில் ஆட்டமே மாறியது. 105 ரன்களுக்கு விக்கெட் இல்லாமல் 122 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலை வந்தது. ஆனால் அதன்பின் ஷ்ரேயாஸ் 48, அக்சர் பட்டேல் 29 என்று ஆட்டத்தை மாற்றி இந்திய வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.
கோலி ரசிகர்கள்
இந்த நிலையில்தான் பிரபல வாட்டர் பாட்டில் நிறுவனமான பிஸ்லெரி நிறுவனத்தை இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். கிண்டல் தாண்டி மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகின்றனர்.
அதன்படி இந்த மேட்சிற்கு பிறகு.. கோலி டிரெஸ்ஸிங் ரூமில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது பிஸ்லெரி பாட்டிலை தூக்கி போட்டு அதை நிற்க வைக்க கோலி முயன்றார். நாம் பாட்டிலை தூக்கி போட்டு.. flip செய்து எப்படி நிற்க வைக்க முயற்சி செய்வோம்.. கோலி அப்படி செய்துள்ளார்.
ஆனால் பாட்டில் விழுந்துவிட்டது. இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் பிஸ்லெரி நிறுவனத்தை அடித்துக்கொண்டு இருக்கின்றனர். உங்கள் பாட்டில் டிசைனை மாற்றுங்கள். உங்கள் பாட்டில் நிற்கவில்லை.
தூக்கி போட்டால்.. flip செய்தால் நிற்கும் வகையில் உங்கள் பாட்டிலை மாற்றுங்கள். எங்கள் அண்ணன் கோலி தூக்கி போட்டால் உங்கள் பாட்டில் நிற்க வேண்டும். ஆனால் அப்படி நிற்காமல் பாட்டில் ஆடுகிறது. அது மோசம். உங்கள் டிசைனை மாற்றுங்கள் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications