ஏமாற்றம்.. சோகம்.. ஆஸ்திரேலியா அணியா இது? உலகக் கோப்பையில் இனி மீளவே முடியாது? 3 காரணங்கள்
சென்னை: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்து உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை ஆஸ்திரேலியா இப்படி தோல்விகளை சந்தித்து உள்ளது.
இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் போட்டியை ஆஸ்திரேலியா தோல்வியுடன் தொடங்கியது இல்லை. ஆனால் இந்த வருடம் இந்தியாவிடம் தோற்று தொடரை தோல்வியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா அணி. அதேபோல் முதல் இரண்டு போட்டிகளை இதுவரை ஆஸ்திரேலியா அடுத்தடுத்து தோற்றதே இல்லை.
இந்த முறை இந்தியாவிடம் தோற்ற ஆஸ்திரேலியா அடுத்த போட்டியே தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. கடந்த உலகக் கோப்பை போட்டியில் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா இந்த முறை இரண்டு போட்டிகளில் தொடக்கத்திலேயே தோல்வி அடைந்து.. வரிசையாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்து உள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை ஆஸ்திரேலியா இப்படி வரிசையாக 4 முறை தோல்வி அடைந்தது இதுவே முதல்முறை

அடுத்தடுத்த தோல்வி: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா 199க்கு ஆல் அவுட ஆனது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. அந்த போட்டியில் ஜடேஜாதான் ஆட்டத்தை மாற்றினார். இன்று ஜடேஜா மட்டும் 3 விக்கெட், குல்தீப், பும்ரா 2 விக்கெட் , சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதன் பின் இறங்கிய இந்திய அணி கோலியின் 85 மற்றும் கே எல் ராகுலின் 97 ரன்கள் காரணமாக இந்தியா வென்றது.
நேற்று தென்னாப்பிரிக்கவிடமும் தோல்வி அடைந்தது. நேற்று முதலில் இறங்கிய தென்னாபிரிக்கா 50 ஓவரில் 311/7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இறங்கிய ஆஸ்திரேலியா பெரிதாக ஆர்வமே இன்றி மைதானத்தில் ஆடியது.
உலகக் கோப்பை நடக்கிறது என்ற ஆர்வமே இல்லாமல் அவர்களின் ஆட்டம் இருந்தது. 40.5 ஓவர் வரை திக்கி திணறி ஆடிய ஆஸ்திரேலியா வெறும் 177 ரன்கள் எடுத்து ஆல் அவுட்ஆனது . இந்தியாவிற்கு எதிராகவும் 200 ரன்கள் கூட எடுக்காமல் ஆல் அவுட் ஆன நிலையில் 2வது தோல்வியை பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் ஆப்கானிஸ்தானுக்கு மேலே 9வது இடத்திற்கு ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
தோல்விக்கு காரணம்: ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகின்றன. முதல் விஷயம் அவர்களின் கேப்டனின் அணுகுமுறை. கேப்டன் பாட் கும்மின்ஸ் சிறந்த டெஸ்ட் கேப்டனாக இருந்தாலும் ஒருநாள் போட்டிகளை அவர் அணுகும் முறை சரியாக இல்லை. பவுலர் கேப்டனாகும் பட்சத்தில் அவர் பவுலிங்கை இன்னும் மெருகேற்றுவார் என்று கூறுவார்கள்.

ஆனால் இங்கே பாட் கும்மின்ஸ் இருந்தும் ஆஸ்திரேலியாவின் பவுலிங் மிக மோசமாக உள்ளது.ஒரு கேப்டன் அணியை முன்னின்று வழி நடத்த வேண்டும். பாண்டிங், ஸ்டீவ் வாக் அப்படித்தான் இருந்தனர். ஆனால் பாட் கும்மின்ஸ் அப்படி இல்லை. அவர் மைதானத்தில் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லை.
இரண்டாவதாக ஆஸ்திரேலியா அணியில் லெப்ட் ஹேண்ட் ஸ்பின் பவுலர் இல்லை. இந்திய பிட்சில் அப்படி ஒருவர் மிக மிக அவசியம். அப்படி ஒரு ஸ்பின் பவுலர் இல்லாதது ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதெல்லாம் போக ஆஸ்திரேலிய அணியிடம் நல்ல பேட்டிங் இருந்தும் யாரிடமும் பெரிதாக ஆர்வமே இல்லை. பெரிதாக அடிக்க வேண்டும்.. ஆட்டத்தில் வேகம் காட்ட வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் ஆடி வருகின்றனர்.
இதெல்லாம் போக அந்த அணியில் அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், சீன் அபோட், டிராவிஸ் ஹெட் போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பினாலும் உலகக் கோப்பை அணியில் எடுக்கப்பட்டு உள்ளதும் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. 2007ல் சென்ற ராகுல் டிராவிட் தலைமையிலான உலகக் கோப்பை இந்திய அணி போல ஆஸ்திரேலியா இப்போது மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications