திட்டமிட்டு கோலி செஞ்சுரி கொண்டாட்டத்திற்கு இடையே.. பாபர் ஆஸம் ராஜினாமா செய்தாரா? இப்படி ஒரு காரணமா?
சென்னை: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக கோலி செஞ்சுரி அடித்த அதே நேரத்தில் பாகிஸ்தானின் அனைத்து பார்மெட் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆஸம் ராஜினாமா செய்தார்.
நேற்று பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகினார். 2023 உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்து இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதைத் தொடர்ந்து லாகூரில் இந்த முடிவை பாபர் அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் ஜாகா அஷ்ரஃப் உட்பட உயர் அதிகாரிகளை சந்தித்த பின்னர் பாபர் இந்த முடிவை எடுத்தார்.

மூன்று பார்மெட் கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தானுக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று பாபர் ஆசம் தெரிவித்துள்ளார், பல்வேறு ஆலோசனைக்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கான முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். நடந்து வரும் உலகக் கோப்பையில் அழுத்தத்தின் காரணமாக பாபர் சரியாக ஆடவில்லை.
மோசமான ஆட்டம்: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாபர், பாகிஸ்தானுக்கு ஒரு சதம் கூட இல்லாமல் வெறும் 320 ரன்களை மட்டுமே இந்த தொடர் முழுக்க எடுத்தார். சில போட்டிகளில் சிங்கிள் டிஜிட் ரன்களை கூட அவர் எடுத்தார். ஒரு கேப்டனாகவும் அவர் சரியாக ஆடவில்லை. அவரின் கேப்டன்சி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
முக்கியமாக அணியின் முன்னாள் வீரர்களே .. அவர் கேப்டன்சி சரியில்லை. அவர் நல்ல கேப்டன் கிடையாது. அவருக்கு கேப்டன்சி நுணுக்கங்கள் தெரியவில்லை என்று கடுமையாக விமர்சனங்கள் வைத்தனர்.
2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரில் பாபர் முதல் முறையாக பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்தார். அதன்பின், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். ஆனால் நான்கு ஆண்டுகளில், கேப்டன்சி அவ்வளவு சிறப்பாக இல்லை. அணி எந்த கோப்பையையும் வாங்கவில்லை. 2022 இல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசியக் கோப்பையிலும், ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானை இரண்டாம் இடத்தைப் பிடிக்க பாபர் உதவினார். ஆனாலும் அவரின் கேப்டன்சி அதில் பெரிதாக கவனிக்கப்படவில்லை.
ராஜினாமா : இந்த நிலையில்தான் பாகிஸ்தான் அணியின் தோல்வியால் அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர், பயிற்சியாளர் குழு, தேர்வுக்குழு, கிரிக்கெட் போர்ட் உறுப்பினர்கள் எல்லோரும் ராஜினாமா செய்தனர். இதை தொடர்ந்து பாபர் ஆசமும் ராஜினாமா செய்தார். அதோடு பாகிஸ்தான் பவுலர் ஷகீன் அப்ரிடி அணியின் டி 20 கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சரியாக நேற்று நேரம் பார்த்து.. நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக கோலி செஞ்சுரி அடித்த அதே நேரத்தில் பாகிஸ்தானின் அனைத்து பார்மெட் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆஸம் ராஜினாமா செய்ததாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் உலகில் மிக அதிக ஒருநாள் செஞ்சுரி அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. 50 செஞ்சுரிகளை இவர் ஒருநாள் போட்டிகளில் அடித்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற சாதனையை முறித்துள்ளார்.

சச்சின் மொத்தமாக 100 சதங்கள் அடித்துள்ளார். இதில் 49 சதங்கள் ஒருநாள் போட்டிகளில் இருந்து வந்தது. 51 சதங்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வந்தது . இப்போது விராட் கோலி 29 டெஸ்ட் போட்டி சதங்களை அடித்துள்ளார். அதேபோல் 1 டி 20 சதம் அடித்துள்ளார். அதோடு நிற்காமல் 50 ஒருநாள் சதம் அடித்துள்ளார். மொத்தமாக 80 சதம் அடித்துள்ளார்.
இந்த சாதனைக்கு இடையே ராஜினாமா செய்தால் நம்முடைய முடிவு பெரிதாக விவாதிக்கப்படாது. இணையத்தில் கலாய்க்கப்பட மாட்டோம். விவாத பொருள் ஆக மாட்டோம் என்று திட்டமிட்டு அவர் இந்த முடிவை அந்த நேரத்தில் அறிவித்ததாக நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications