மோடி கை கொடுத்த போது ஷ்ரேயாஸ் தந்த ரியாக்சன்.. கவனிச்சீங்களா? ஏன் அப்படி பார்த்தார்?
சென்னை: உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்பாக பிரதமர் மோடி உடைமாற்றும் அறையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களை 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து எடுத்தது.

அதன்பின் இறங்கிய ஆஸ்திரேலியா அணி எளிதாக வெறும் 4 விக்கெட்டை இழந்து 241 ரன்களை எடுத்தது. வெறும் 43 ஓவரில் ஆஸ்திரேலியா அணி இலக்கை அடைந்து வென்றது. இதன் மூலம் 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடியும் கூட தோல்வி அடைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்து எல்லா போட்டிகளிலும் சிறப்பாக ஆடி 10 போட்டிகளை இந்தியா வென்றது.
இந்தியா தோல்வி: ஆனால் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்தியாவின் சிறப்பாக உலகக் கோப்பை டீம்.. ஒருநாள் அணிகளிலேயே சிறப்பான டீம் என்று எல்லாம் இந்தியாவின் இந்த அணி பாராட்டப்பட்டது.
ஆனாலும் பைனல் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது. நாக் அவுட் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவிடம் வேறு விதமான ஆக்ரோஷ பலம் இருக்கும். இதை எதிர்கொள்ள முடியாமல் நேற்று ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.
விவாதம்: உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை அகமதாபாத் மைதானத்தில் நடத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நரேந்திர மோடி மைதானம், பெரிய மைதானம் என்ற காரணத்திற்காக இந்த ஆட்டம் நடத்தப்பட்டு இருக்கலாம். ஆனால் வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு அதிக அனுபவம் உள்ளது. இங்கே பல போட்டிகளை ஆடி உள்ளனர். ரோஹித் தொடங்கி பல வீரர்கள் இங்கே அதிகம் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். ரோஹித், ஷ்ரேயாஸ், சூர்ய குமார், பும்ரா ஆகியோர் கூட இங்கே அதிகம் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். அப்படி இருக்க அகமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தை நடத்தும் முடிவை யார் எடுத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மோடி வருகை: இந்த நிலையில்தான் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்பாக பிரதமர் மோடி உடைமாற்றும் அறையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி இந்திய வீரர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார் மோடி. ரோஹித், கோலி தோளில் கைபோட்டு அவர்களுக்கு ஆதரவு கூறினார். அதோடு நிற்காமல் வீரர்கள் சோகமாக இருந்த நேரத்தில் அவர்களை வரிசையில் நிற்க வைத்து அவர்களுக்கு கைகொடுத்து ஆறுதல் சொல்வது போல பேசினார்.
அப்போது அதில் ஆர்வம் இல்லாதது போல ஷ்ரேயாஸ் ஐயர் ரியாக்சன் கொடுத்தார். கையை கொடுத்த உடனே இழுத்துக்கொண்டு பின்னர் வேறு பக்கம் அவர் பார்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் விட்டேத்தியான மனநிலையில் முகத்தை திருப்பி கொடுத்த ரியாக்சன் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications