அடிபட்ட சிங்கம்.. கோலிக்கு பிசிசிஐ பெரிய செக்! ஐபிஎல்லில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.. ஏன் பாகுபாடு?
சென்னை: 2024 ஐபிஎல் தொடருக்கான அணிகள் தயாராகி வருகின்றன. ரிட்டென்சன் முடிந்த நிலையில் அடுத்து ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்தான் கோலிக்கு முக்கியமான சிக்கல் ஒன்று ஏற்பட்டு உள்ளது.
2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. அந்த அணி தக்கவைத்த வீரர்கள்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேட்ச்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, மனோஜ் பந்தேஜ், வைஷாக் விஜய்குமார், ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், ஆகாஷ் தீப், ஆகாஷ் தீப் சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா மற்றும் ராஜன் குமார்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி மற்றும் கேதர் ஜாதவ். டிரேட் செய்யப்பட்ட வீரர்கள்: மயங்க் டாகர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து) செய்யப்பட்டு உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம்: தற்போது பெங்களூர் அணியில் ஆடும் கோலி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அடுத்த வருடம் டி 20 உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ள நிலையில் கோலி மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்றால்.. இந்த ஐபிஎல் சீசனில் நன்றாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதன்படி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில்: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (சி) (வாரம்), சஞ்சு சாம்சன் (விக்கி), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். , முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.
3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (சி), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (வி.கே.), ஜிதேஷ் சர்மா (வி.கே.), ரவீந்திர ஜடேஜா (விசி), வாஷிங்டன். , ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது. சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
புறக்கணிப்பு: டி 20 அணியில் இந்த முறை கோலி எடுக்கப்படவில்லை. 2022 டி 20 உலகக் கோப்பைக்கு பின் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. இதனால் அணிக்கு கோலி திரும்புவாரா என்பதே சந்தேகமாக உள்ளது. கோலி கோரிக்கையின் அடிப்படையில் அவர் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும்.. அவரை வேண்டுமென்றே பிசிசிஐ இப்படி அடிக்கடி ரெஸ்ட் கொடுத்து உட்கார வைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோலி மீண்டும் இந்திய டி 20 அணிக்கு திரும்ப வேண்டும் என்றால்.. தற்போது பெங்களூர் அணியில் ஆடும் கோலி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவருக்கு இந்த ஐபிஎல் சீசனில் நன்றாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications