Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய அணியில் நடந்த முக்கிய மாற்றம்.. இந்த முறை உலகக் கோப்பை நமக்குத்தான்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை; இந்திய அணியில் தற்போது நடந்திருக்கும் முக்கிய மாற்றங்கள் சிலவற்றின் காரணமாக காரணமாக உலகக் கோப்பையில் நாம் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்திய அணி 2023 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது. இந்த தொடரில் வீழ்த்தவே முடியாத அணியாக இந்திய அணி உருவெடுத்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணியின் பலம் என்ன? இந்த தொடரில் மேலும் வெற்றிபெற அந்த அணி என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்திய அணியின் டாப் பாஸ்ட் பவுலர்கள்: முகமது ஷமி ஷரத்துல் தாக்கூருக்கு மாற்றாக வந்து அணியில் அதிக விக்கெட் எடுக்கும் வீரராக மாறி உள்ளார். இந்த சீசனில் வாய்ப்பு கிடைக்காமல் ஹர்திக் பாண்டியாவின் காயம் காரணமாக ஷமி அணிக்குள் வந்தார். வந்த முதல் மேட்சில் இருந்தே அவர் அதிரடியாக ஆடி வருகிறார்.

Why Team India have the more chance of winning the World Cup 2023?

நேற்று மேட்சில் 5 விக்கெட், அதற்கு முன் கடந்த மேட்சில் 4 விக்கெட், அதற்கு முந்தைய மேட்சில் 5 விக்கெட் என்று ஷமி ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறார். இவரை ஏன் உட்கார வைத்தார்கள் என்று பலரும் கேட்கும் அளவிற்கு அவரின் ஆட்டம் உள்ளது,

உலகக் கோப்பை போட்டியில் ஷமி ஆடிய INNINGS 14. அவர் எடுத்த விக்கெட் 45. குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் ஷமி முதலிடத்தில் இருக்கிறார். இது போக பும்ரா கண்டிப்பாக எல்லா போட்டியிலும் 2 விக்கெட் எடுக்கிறார் . அவரை தொடர்ந்து சிராஜும் நேற்று போட்டியில் 3 விக்கெட் எடுத்து பார்மிற்கு திரும்பி உள்ளார். இதனால் இந்திய அணியின் பாஸ்ட் பவுலிங் டாப்பில் உள்ளது.

ஸ்பின் பவுலிங்: பாஸ்ட் பவுலிங் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும்.. இன்னொரு பக்கம் குல்தீப் - ஜடேஜா பிட்ச் எப்படி இருந்தாலும் விக்கெட் எடுத்துவிடுகின்றனர். இரண்டு பேரின் ஸ்பின் பவுலிங்கும் எதிரணிக்கு சவாலாக உள்ளது. இக்கட்டான நேரத்தில் பிரேக் கொடுப்பதே இவர்கள்தான். இவர்கள் அடிக்கடி இடையில் விக்கெட் எடுப்பதால் இந்தியாவின் மொத்த பவுலிங் யூனிட் அசுரர் பலத்தோடு இருக்கிறது.

( ஷமி பற்றி பேசும்போதெல்லாம்.. அவரின் முன்னாள் மனைவி பெயர் அடிபடுவது ஏன்? 2 பேர் இடையில் நடந்தது என்ன?)

ஹர்திக் பாண்டியா ரிட்டர்ன்: இது போக சூர்யா குமார் யாதவ் இடத்தில் ஹர்திக் பாண்டியா வந்தால் 6வது பவுலிங் ஆப்ஷன் வரும். அப்படி வரும் பட்சத்தில் கூடுதலாக இன்னும் எளிதாக விக்கெட் எடுக்கலாம். அதேபோல் பேட்டிங்கிலும் இந்திய அணியின் பலம் மாறாமல் இருக்கும்.

Why Team India have the more chance of winning the World Cup 2023?

பேட்டிங்; பேட்டிங்கில் ஏற்கனவே கோலி, ரோஹித் மாறி மாறி ஒவ்வொரு இன்னிங்சிலும் அடித்து வருகின்றனர். கே எல் ராகுலும் பார்மில் உள்ளார். ஜடேஜாவும் நேற்று பார்மிற்கு திரும்பினார். மீது உள்ளது ஷ்ரேயாஸ், கில் மட்டுமே. அவர்களும் நேற்று அதிரடியாக ஆடினார்கள். இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 16 பந்துகள் பிடித்து 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். எதிர்பார்த்தபடியே ஷார்ட் பந்தில் அவர் அவுட் ஆனார். முழுமையாக ஷார்ட்டாக் வராமல் பாதி ஷார்ட் பந்திற்கே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி உள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை எடுத்த ரன்கள் - 128 ரன்கள் மட்டுமே ஆகும்.,
இன்னிங்ஸ் - 6
சராசரி - 32
ஸ்ட்ரைக் ரேட்- 81.01 என்று மோசமாக ஆடி உள்ளார். அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் பார்மிற்கு திரும்பினார். நேற்று இலங்கைக்கு எதிராக இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயரும் 82 ரன்கள் வரை அதிரடியாக ஆடினார். இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து சரியாக ஆடாத ஷ்ரேயாஸ் ஐயர் இன்று போட்டியில் பார்மிற்கு திரும்பினார் . 56 பந்தில் 82 ரன்கள் எடுத்தார்.

Why Team India have the more chance of winning the World Cup 2023?

இந்த சீசனில் தொடக்கத்தில் டெங்கு காரணமாக ஆடாமல் அதன்பின் அணிக்குள் வந்த கில் மோசமான பார்மில் இருந்தார். ஆனால் நேற்று அவரும் பார்மிற்கு திரும்பினார். முக்கியமாக கில் அதிரடியாக ஆடி தொடக்கத்தில் இருந்தே 92 பந்தில் 92 ரன்கள் எடுத்தார். 11 பவுண்டரிகளை அடித்து இலங்கை பவுலர்களை இவர் திணறடித்தார் . அதேபோல் 2 சிக்ஸர்களை அடித்து நம்பிக்கை அளித்தார்.

எல்லாமே கவர் ஆகிவிட்டது: இதுவரை 7 போட்டிகளில் ஆடி உள்ள இந்திய அணி 7 போட்டிகளிலும் வென்றுள்ளது. 11 க்கு 11 போட்டிகளில் வெல்லும் தகுதியுடன் இந்திய அணி உள்ளது. இந்திய அணியை வீழ்த்த போகும் அந்த அணி எது என்பதே இந்த தொடரில் பெரிய கேள்வியாக உள்ளது. பேட்டிங்கில் எல்லாம் கவர் ஆகிவிட்டது. பவுலிங்கிலும் எல்லாம் கவர் ஆகிவிட்டது. இப்படி எல்லா பீல்டும் கவர் ஆகி உள்ளதால் கண்டிப்பாக இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+