ஷமி பற்றி பேசும்போதெல்லாம்.. அவரின் முன்னாள் மனைவி பெயர் அடிபடுவது ஏன்? 2 பேர் இடையில் நடந்தது என்ன?
சென்னை; இந்திய அணியில் ஷமி பற்றி பேசும்போதெல்லாம் அவரின் மனைவி பற்றியும் பேச்சுக்கள் அடிபடும்.. அப்படி இவரின் வாழ்க்கையில் என்னதான் நடந்தது? அவரின் மனைவி பற்றி அடிக்கடி பேசப்படுவது ஏன்? என்று இங்கே பார்க்கலாம்.
4 வருடத்திற்கு முன் இந்திய அணியின் 2019 உலகக் கோப்பை அணிக்கு முதற்கட்டமாக தேர்வாக இருந்தவர்தான் ஷமி. அவருடன் இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை அனுப்ப வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டமாக இருந்தது. ஆனால் போக போக நிலைமை மாறியது.
காயம் பிரச்சனை; 2016 மத்தியில் அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் அவரை முடக்கி போட்டது. இதனால் அவர் செய்து கொண்ட ஆபரேஷன் காரணமாக அவர் 2 வருடம் வரை சரியாக அணியில் இடம்பெற முடியாமல் கஷ்டப்பட்டார். காயம் அவரை தொடர்ந்து வாட்டியது. கடந்த வருடம் இவர் யோ யோ டெஸ்ட்டில் கூட தோல்வி அடைந்தார். ஆம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு முன் செய்யப்பட்ட யோ யோ டெஸ்டில் இவர் தோல்வி அடைந்தார். அதனால் அந்த தொடரில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு இவரின் பார்ம் மிக மோசமாக பாதாளத்தை தொட்டது.

மனைவியுடன் பிரச்சனை: அப்போது அவருக்கு இரண்டு வாய்ப்புதான் இருந்தது. ஒன்று அப்படியே முடங்கி போய், இர்பான் பதான் போல கமெண்ட்ரி செய்ய கிளம்புவது. இல்லையென்றால் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, உலகிற்கு நிரூபணம் செய்வது. அவர் தேர்வு செய்தது இரண்டாவது ஆப்ஷனை. ஆம், அவர் வீட்டில் முடங்கவில்லை, மாறாக தன்னை ஜிம்மிற்குள் முடக்கிக் கொண்டார்.
அவருக்கு உடலில் பிரச்சனை இருந்த அதே நேரத்தில் அவரின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் உடனும் பிரச்சனை இருந்தது. ஷமி மீது ஹசின் சூதாட்ட புகார் கூட வைத்து இருந்தார். அது தவறு என்று நிரூபிக்கப்ட்டது. இதனால் அவர் தனது குழந்தையை பிரிய நேர்ந்தது. பிசிசிஐ அப்போதில் இருந்து அவரை கொஞ்சம் தள்ளியே வைத்து இருந்தது. அடிக்கடி அவரை புறக்கணிக்க தொடங்கியது.
புகார் மேல் புகார்; ஷமி தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அவர் செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
( கதற வைத்த மூவர் கூட்டணி.. இலங்கையை புரட்டி அடித்த இந்தியா.. வெற்றிக்கு பின் உள்ள 4 ரகசியங்கள்! )
முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்தார். வெளிநாட்டில் விளையாட செல்லும் போது வேண்டும் என்றே அவரைவிட்டுவிட்டு செல்வதாக புகார் அளித்துள்ளார். அப்படியே அழைத்து சென்றாலும் சக வீரர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்துவார் என்றுள்ளார்.
முகமது ஷமி தன்னை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்துவார் என்றும் கூறியுள்ளார். பலமுறை தன்னை மோசமாக தாக்கி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அவரது குடும்பத்தில் இருப்பவர்களும் மோசமாக தாக்கி இருக்கிறார்கள் என்றுள்ளார். மேலும் தன்னை அவரது குடும்ப உறுப்பினர்களும், ஷமியும் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறியுள்ளார். இதனால்தான் தன்னை மோசமாக தாக்கினார்கள் என்று அவர் பேட்டி அளித்து இருக்கிறார்கள். தான் உயிரோடு இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றுள்ளார். ஆனால் இந்த புகார்கள் எல்லாம் பொய்யானது என்று ஷமி கூறினார். இந்த புகார்கள் எதுவும் நிரூபிக்க முடியாத நிலையில் ஷமி மீண்டும் கிரிக்கெட்டிருளு வந்தார். அதோடு அவர் விவாகரத்தும் பெற்றார்.

போட்டி: இந்திய அணியில் ஷமி தன்னை நிரூபிக்கும் முன் பும்ராவும் , புவனேஷ்வர்குமாரும் இந்திய அணியில் பெரிய வீரர்களாக வளர்ந்து இருந்தனர். இதனால் ஷமி அடுத்த கட்ட சோதனைக்கு தயார் ஆனார். இவர்கள் இருவரை விட தன்னை சிறந்தவர் என்று நிரூபிக்க வேண்டிய சூழநிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் ஷமி பல பிரச்சனைகளுக்கு இடையில் அதை கடந்து வந்தார்.
அதன்பின்தான் ஷமி தன்னை யோ யோ டெஸ்டில் நிரூபணம் செய்தார். அதோடு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வானார். வரிசையாக தனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நிரூபணம் செய்து கொண்டு வந்தார். இந்த நிலையில்தான் இந்த வருட உலகக் கோப்பைக்கு தேர்வான ஷமி.. அணிக்குள் எதிர்பாராமல் உள்ளே வந்து தற்போது இந்திய அணியின் வெற்றி முகமாக மாறி உள்ளார்.
எப்படி உள்ளே வந்தார்: இந்த சீசனில் வாய்ப்பு கிடைக்காமல் ஹர்திக் பாண்டியாவின் காயம் காரணமாக ஷமி அணிக்குள் வந்தார். வந்த முதல் மேட்சில் இருந்தே அவர் அதிரடியாக ஆடி வருகிறார்.

நேற்று மேட்சில் 5 விக்கெட், அதற்கு முன் கடந்த மேட்சில் 4 விக்கெட், அதற்கு முந்தைய மேட்சில் 5 விக்கெட் என்று ஷமி ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறார். இவரை ஏன் உட்கார வைத்தார்கள் என்று பலரும் கேட்கும் அளவிற்கு அவரின் ஆட்டம் உள்ளது,
உலகக் கோப்பை போட்டியில் ஷமி ஆடிய INNINGS 14. அவர் எடுத்த விக்கெட் 45. குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் ஷமி முதலிடத்தில் இருக்கிறார். ஆனாலும் அணியில் இவர் இடம் இன்னும் உறுதியாகவில்லை. ஷாகீர் கான் 23, ஸ்ரீநாத் 34 போட்டிகளில் செய்ததை இவர் 13 போட்டிகளில் செய்து அசத்தி உள்ளார். ஆனாலும் அணியில் இவர் இடம் இன்னும் உறுதியாகவில்லை என்பதுதான் இதில் உள்ள; சோகமே!












Click it and Unblock the Notifications