இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி நடக்குமா? மின் கட்டணம் நிலுவையால் மைதானத்தின் மின் இணைப்பு துண்டிப்பு
ராய்ப்பூர்: இந்தியா ஆஸ்திரேலியா இடையே 4ஆவது டி20 போட்டி நடைபெறும் ராய்ப்பூர் மைதானத்தில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாயுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் படை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இதனால் இன்று நடைபெறும் 4ஆவது டி20 போட்டி ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
டி20 போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இந்த நான்காவது டி20 போட்டி இன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி தொடங்க சில மணி நேரம் இருக்கும் நிலையில், இன்னுமே கூட மைதானத்தின் சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. கடந்த 2009 முதல் மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
3.16 கோடி ரூபாய் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதால், 5 ஆண்டுகளுக்கு முன் மைதானத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் சிறப்பு வேண்டுகோள் அளித்த நிலையில், தற்காலிக மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், அது பார்வையாளர்களின் கேலரிக்கு மட்டுமே இருக்கும்.
மாற்றுத் திட்டம் என்ன: இன்றைய போட்டி பகலிரவு போட்டியாக நடக்கும் நிலையில், மைதானத்தில் floodlights எனப்படும் மின்விளக்குகள் தேவை. ஆனால், அந்த சிறப்புத் தற்காலிக மின் இணைப்பில் இந்த மின்விளக்குகள் வராது. எனவே, இன்றைய போட்டிக்கு மின்விளக்குகளை இயக்க ஜெனரேட்டரைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராய்ப்பூர் வட்ட பொறுப்பாளர் அசோக் கண்டேல்வால் கூறுகையில், "மைதானத்தின் தற்காலிக இணைப்பின் திறனை அதிகரிக்க கிரிக்கெட் சங்க செயலாளர் விண்ணப்பித்துள்ளார். இப்போது தற்காலிக இணைப்பில் 200kv மின்சாரம் மட்டுமே அங்கே வழங்கப்பட்டுள்ளது. அதை 1000 kv ஆக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவில்லை" என்றார்.
என்ன பிரச்சினை: கடந்த 2018ஆம் ஆண்டில், அங்கே அரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. அப்போது அங்கே மின்சாரம் இல்லாத நிலையில், வீரர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். அப்போது தான் மைதானத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மின்கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும், ₹3.16 கோடி மின்சார கட்டணம் பாக்கி வைத்துள்ளதும் தெரிய வந்தது.
இந்த மைதானம் கட்டப்பட்ட பிறகு, அதன் பராமரிப்பு பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேநேரம் மீதமுள்ள செலவுகளை விளையாட்டுத் துறை ஏற்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. மின்கட்டணம் குறித்துத் தெளிவு இல்லாத நிலையில், இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. அம்மாநில மின்வாரியம் நிலுவைத் தொகையை வழங்குமாறு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறைக்குப் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பணம் செலுத்தப்படவில்லை.
அடுத்து என்ன: அதன் பிறகே கடந்த 2018இல் அங்கே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு அங்கே 3 சர்வதேச போட்டிகள் நடந்துள்ளது. இது குறித்து சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க ஊடக ஒருங்கிணைப்பாளர் தருணேஷ் சிங் பரிஹார் கூறுகையில், "சர்வதேச போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் சந்தேகம் உள்ளது. தற்போது முக்கிய போட்டிகளுக்கு ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது எவ்வளவு மின் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரியவில்லை. . சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட சிறப்பு கணெக்ஷனில் மட்டும் கேலரிக்கு மின்சாரம் கிடைக்கிறது" என்றார். இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையே போட்டி நடக்க சில மணி நேரம் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications