சென்னையில் தோனி தொடங்கிய ஸ்போர்ட்ஸ் செண்டர்.. பேடில் கோர்ட் முதல் நீச்சல் குளம் வரை.. என்ன ஸ்பெஷல்?
சென்னை: சென்னையில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான தோனி திறந்துள்ள 7 Paddle என்ற ஸ்போர்ட் செண்டர் இளைஞர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த 7 Paddle ஸ்போர்ட் செண்டரில் இருக்கும் 3 பேடில் கோர்ட், பிக்கிள் பால் கோர்ட், நீச்சள் குளம், ஜிம், உடற்பயிற்சிக்கு பிறகு ஓய்வெடுக்கும் சிறப்பு அறை, கஃபே மற்றும் நீராவிக் குளியல் உள்ளிட்ட பல்வேறு வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு சென்னை எப்போதும் ஸ்பெஷலான இடம். எதைத் தொடங்குவதாக இருந்தாலும், அதனை சென்னையில் இருந்தே தொடங்குவார். தோனியின் சினிமா தயாரிப்பு நிறுவனம் கூட தனது முதல் படத்தை தமிழில் இருந்துதான் தொடங்கப்பட்டது. தற்போது சென்னையின் பாலவாக்கம் பகுதியில் பிரத்யேகமான ஸ்போர்ட்ஸ் செண்டர் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

சுமார் 20 ஆயிரம் அடி பரப்பளவில் தோனி தொடங்கி இருக்கும் ஸ்போர்ட்ஸ் செண்டர் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் உள்ள பேட்மிண்டன் கோர்ட், பிக்கிள் பால் கோர்ட்களில் இளைஞர்கள் குவிந்து வருகின்றனர். அதேபோல் இளம் தலைமுறையினர் ஃபிட்னஸிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர்.
அதற்கேற்ப விளையாட்டு மற்றும் ஃபிட்னஸ் ஆகியவற்றை கவனத்தில் கொண்டே இந்த 7 Paddle என்ற ஸ்போர்ட்ஸ் செண்டரை தோனி சென்னையில் தொடங்கி இருக்கிறார். இந்த ஸ்போர்ட்ஸ் செண்டரில் 3 Paddle கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. பேடில் என்பது டென்னிஸ் + ஸ்குவாஷ் இணைந்ததை போன்ற ஒரு ஆட்டமாகும். அதேபோல் ஒரு பிக்கிள் பால் கோர்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஸ்விம்மிங் பூல் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ஜிம், உடற்பயிற்சிக்கு பிறகு உடலை இலகுவாக மாற்றுவதற்கான சிறப்பு அறை, கஃபே மற்றும் நீராவிக் குளியலுக்கான வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. இதனை திறந்து வைத்து விளம்பரம் செய்வதற்காக தான் தோனி ஒரு வாரமாக சென்னையில் தங்கி இருந்தார். இந்த விளம்பர நிகழ்ச்சியில் தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அனிருத் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.
சாதாரணமாக பேடில் விளையாட வரும் இளைஞர்கள், அதன்பின் சிறிது நேரம் கஃபேவில் நேரம் செலவிட்டு செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் இத்தனை வசதிகளும் செய்யப்பட்டிருப்பதால், சென்னைவாசிகள் மத்தியில் இந்த ஸ்போர்ட்ஸ் செண்டர் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications