ஐபிஎல் டிக்கெட்.. அரங்கேறும் மெகா ஃப்ராடு! அமைச்சரை கைகாட்டும் லோக்கல் கைகள்! இப்படித் தான் மோசடியா?
சென்னை: ஐபிஎல் 18 சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பிற மைதானங்களில் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது. ஆன்லைன் டிக்கெட் எடுக்கச் சென்றாலே லட்சக்கணக்கானோருக்கு பின் நீங்கள் இருக்கிறீர்கள் என மெசேஜ் வருகிறது. அதே நேரத்தில் பிளாக்கில் அதிக விளக்கு டிக்கெட் விற்றதாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் டிக்கெட் இருக்கும்போது பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் எப்படி விற்கப்படுகிறது? ப்ளாக் டிக்கெட் விற்று கைதானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என விசாரித்த போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தது. அமைச்சர்கள் பெயரை சொல்லி காம்ப்ளிமென்ட்ரி டிக்கெட்டுகளை வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் பல டி20 தொடர்கள் நடந்தாலும் ஐபிஎல் தான் பணம் கொழிக்கும் தொடராக இருக்கிறது. உலக அளவில் பிரபலமான வீரர்கள் கூட ஐபிஎல் இல் தங்கள் பெயரை பதிவு செய்து ஏதாவது ஒரு அணி தங்களை ஏலத்தில் இருக்காதா என காத்திருக்கின்றன காரணம் அந்த அளவுக்கு அதில் பணம் புரள்கிறது.

இது ஒரு புறம் இருக்க, மற்ற அணிகள் விளையாடும் மைதானங்களில் பார்வையாளர்கள் இன்றி காத்து வாங்கிக் கொண்டிருக்க, சென்னை மைதானத்திலோ ரசிகர் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏறக்குறைய 40 ஆயிரம் ரசிகர்கள் பார்த்து போட்டிகளை ரசிக்கும் வகையில் சென்னை மைதானம் இருந்தாலும் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய சென்றால் இரண்டு லட்சம் பேருக்கு பின்னால் ஆன்லைனில் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
இதற்கிடையே ஐபிஎல் டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்றதாக 11 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். கடந்த 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. அப்போது சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்றதாக மணிகண்டன், பாரதி கண்ணன், விஜய கோகுல், உதய் கிரண், விமல் குமார், வாசு, பவன், சந்திரசேகர், மோகன், மோத்வானி, நிரஞ்சன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஐபிஎல் டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது,
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 1700 ரூபாய் டிக்கெட்டை பத்தாயிரம் ரூபாய் வரை விற்பது தெரிய வந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் என்றாலே சேப்பாக்கத்தை சுற்றியுள்ள வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல், சேப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் பலர் பிளாக்கில் டிக்கெட் விற்பதை பார்க்க முடியும். மெதுவாக அருகில் வந்து டிக்கெட் இருக்கிறது, 5000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் என விற்பார்கள்.
இதற்காக போலீசார் சாதாரண உடையில் ரகசியமாக கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். முழுக்க முழுக்க ஆன்லைன் முறையிலேயே டிக்கெட் விற்கப்படும் நிலையில் எப்படி பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது என விசாரித்த போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது. முதலில் ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்பவர்கள் பல மெயில் ஐடிகளை ஓபன் செய்து டிக்கெட் புக்கிங் செய்வதற்கு முன்பாகவே டீடைல் பதிவு செய்துவிட்டு புக்கிங் ஓபன் ஆனவுடன் உடனடியாக ஒரு ஐடிக்கு இரண்டு டிக்கெட் என பத்து முதல் 20 டிக்கெட் களை பிளாக் செய்து விடுகின்றனர். அதற்குப் பிறகு அவற்றை பிரிண்ட் எடுத்து விற்பனை செய்கிறார்கள்.
ஆனால் அதற்குப் பிறகு நடக்கும் மோசடி தான் அதிர்ச்சி தரும் வகையில் இருக்கிறது. அதாவது போட்டி நடத்தும் சிஎஸ்கே நிர்வாகத்திடம் காம்ப்ளிமென்ட்ரி டிக்கெட்டுகளை, பெரும் பெரும் புள்ளிகள் பெற்று அவற்றை தங்கள் ஆதரவாளர்களிடம் கொடுத்து விடுகின்றனர். அவர்கள் அதை வைத்து பிளாக்கில் விற்பனை செய்து பணம் பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர்கள் சிலரின் ஆதரவாளர்கள் காம்ப்ளிமென்ட் டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு அவற்றை பிளாக்கில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சென்னை காவல்துறை, தீயணைப்பு துறை, மாநகராட்சி அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி 50 முதல் 1000 டிக்கெட்டுகள் வரை காம்ப்ளிமென்ட்ரி என பெற்றுக் கொண்டு அவற்றை தங்கள் ஆதரவாளர்கள், ஊழியர்கள் மூலம் விற்கிறார்களா. மேலும் ப்ளாக் டிக்கெட் விற்று கைதானவர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications