இந்தியாவின் நம்பர்.1 செஸ் வீரர் ஆனார் நம்ம ஊர் பிரக்ஞானந்தா.. உஸ்பெகிஸ்தான் தொடரில் வென்று சாதனை!
சென்னை: இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. உஸ்பெகிஸ்தானில் நடந்த UzCHESS CUP MASTERS தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய நிலையில் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளதோடு, உலக தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி தற்போது 4வது இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கெண்ட் நகரில் சர்வதேச அளவிலான UzCHESS CUP MASTERS செஸ் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியாவின் நம்பர்-1 வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் 5.5 புள்ளிகளை பெற்றதால் சாம்பியனை தீர்மானிக்க டை - பிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு ரூபாய் 17 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச செஸ் தரவரிசையில் 11.3 புள்ளிகளை அதிகம் பெற்று குகேஷை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். 2778.3 புள்ளிகளுடன் உலக செஸ் நேரடி தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா.
இதன் மூலம் செஸ் வரலாற்றில் முதன் முறையாக உலக செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் இரண்டு தமிழர்கள் இடம்பிடித்து உள்ளனர். மேலும், இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றார். அதிலும், உலக சாம்பியன் குகேஷை டை பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரிலும் அவர் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications