அப்போ அங்க கேம் விளையாட போகல! ஒரே வாரத்தில் ஒலிம்பிக்ஸில் காலியான 10,000 ஆணுறைகள்! பதறிய ஆபீசர்ஸ்!

Subscribe to Oneindia Tamil

ரோம்: 2026 ஆம் ஆண்டுக்கான மிலான்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு வித்தியாசமான பிரச்சினை உலக அளவில் பெரும்பாலோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் இலவசமாக வழங்கப்பட்டிருந்த 10,000 ஆணுறைகள் வெறும் மூன்று நாட்களிலேயே முழுமையாக தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்பாட்டாளர்கள் அவசரமாக கூடுதலான ஆணுறைகளை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

25வது குளிர்கால ஒலிம்பிக் சீசன் இத்தாலி நாட்டின் மிலன் மற்றும் கோர்டினா நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 92 நாடுகளைச் சேர்ந்த 2,800 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

இதில் பனிச்சறுக்கு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சான் சிரோ மைதானத்தில் நடைபெற்ற கண்கவர் துவக்க விழா நிகழ்ச்சியில் அணிவகுத்தனர். இந்தியா சார்பிலும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்கள் கலந்து கொண்டு பதக்க வேட்டை நடத்தி வருகின்றனர்.

Sports Winter Olympics Condom

குளிர்கால ஒலிம்பிக்

விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும் வீரர்கள் தங்குவதற்கும் ஒரு ஒலிம்பிக் கிராமமே புதிதாக கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் அங்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பற்றாக்குறை உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒலிம்பிக் கிராமத்தில் இலவசமாக வழங்கப்பட்டிருந்த 10,000 ஆணுறைகள் வெறும் மூன்று நாட்களிலேயே முழுமையாக தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டிக்காக ஆரம்ப கட்டமாக சுமார் 10,000 ஆணுறைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆணுறை பற்றாக்குறை

உலகின் பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஒரே இடத்தில் தங்கும் சூழலில், இந்த அளவு போதுமானதாக இருக்கும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமான தேவை உருவாகியதால் 10000 ஆணுறைகளும் மிகவும் விரைவாக காலியாகிவிட்டது. வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தற்காலிக குடியிருப்புகளிலும், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் அறைகளை பகிர்ந்து வீரர்கள் தங்கியுள்ளனர். இதனால் தனிமை உணர்வு குறைந்து, சமூக தொடர்புகள் அதிகமாகவும் இருந்த சூழல், ஆணுறைகளின் தேவை அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக் கிராமம்

போட்டிகளில் வீளையாட வந்த வீரர்கள் பல வாரங்கள் ஒரே வளாகத்தில் தங்குவதால், அவர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இத்தகைய வசதிகள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், 10000 ஆணுறைகளும் தீர்ந்து விட்ட நிலையில், இந்த குறைபாடு தற்காலிகமானது மட்டுமே என்றும், விரைவில் கூடுதல் ஆணுறைகள் விநியோகிக்கப்படும் என்றும் விளையாட்டு போட்டிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். போட்டி முடியும் வரை தேவையான அளவில் இந்த 'வசதி' கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் வாழ்க்கை

முன் நடந்த சில போட்டிகளில் பல லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை வழங்கப்பட்ட அளவு குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2024 பாரிஸ் கோடை ஒலிம்பிக் போட்டிகளில் வீரர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மிகப்பெரிய அளவில் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. கொரோனா கால கட்டுப்பாடுகள் அமலில் இருந்த டோக்கியோ ஒலிம்பிக் காலத்தில் வீரர்களுக்கிடையிலான நெருங்கிய தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

ஒலிம்பிக்கில் ஆணுறைகள்

ஆனால் தற்போதைய போட்டிகளில் வழக்கமான வாழ்க்கை மீண்டும் திரும்பியுள்ளதால் தேவையும் இயல்பாக அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் கிராமங்களில் ஆணுறைகள் வழங்கப்படுவது புதிய நடைமுறை அல்ல. வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கும், சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இம்முறை ஏற்பட்ட திடீர் பற்றாக்குறை, திட்டமிடல் மற்றும் விநியோக மேலாண்மை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்பாராத இந்த சூழ்நிலை போட்டியின் விளையாட்டு நிகழ்வுகளை பாதிக்கவில்லை என்றாலும், ஏற்பாட்டாளர்களுக்கு இது ஒரு நிர்வாக சவாலாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+