இலங்கையில் சிங்களர்கள் நடத்திய வெறியாட்டத்தில் 3 முஸ்லிம்கள் கொலை

இலங்கை அரசில் தமிழர்கள் பங்கேற்பதை பெரும்பான்மையான சிங்களர்கள் வெறுத்தனர். இதனால் தமிழருக்கு எதிரான இனவிரோத போக்கை சிங்களர்கள் கட்டவிழ்த்தனர். இதைத்தொடர்ந்து தனி ஈழம் கேட்டு விடுதலை புலிகள், ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆயுத போராட்டம் கடந்த சில வருடங்களாக முடிவிற்கு வந்துள்ள நிலையில், சிங்களர்கள் கவனம் தற்போது இஸ்லாமியர்கள் மீது திரும்பியுள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் 10 விழுக்காடாக உள்ள முஸ்லிம்கள், இலங்கை அரசியலில் அதிகம் பங்கெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பவுத்த பிட்சுக்கள் பகிரங்கமாக பேசிவருகிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் பகுதிகளில் நேற்று மாலை பவுத்த பிட்சுக்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டுள்ளனர். இதை முஸ்லிம்கள் தட்டி கேட்டபோது, இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது.
தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அளுத்கம மற்றும் பெருவலா ஆகிய கடலோர நகரங்களில் இருதரப்புக்கும் நடுவே நேற்றிவு முதல் இன்று பகல் வரை மோதல் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். முஸ்லிம்களின் கடைகள், வணிக நிறுவனங்கள், பவுத்த கடும்போக்குவாதிகளால் அடித்து நொறுக்கப்பட்டன. சில பகுதிகளில் மசூதிகள் தாக்கப்பட்டதுடன், தொழுகை நடத்தியவர்களும் ரத்தம் வரும்வரை அடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பஸ்சில் பயணம் செய்த முஸ்லிம்களை கூட பவுத்த கடும்போக்குவாதிகள் விட்டுவைக்கவில்லை. பஸ்களை நிறுத்தி அவர்களை கீழே இழுத்து அடித்துள்ளனர். போலீசார் தலையிட்டு வன்முறையாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆயினும், நிலைமை கைமீறி போனதால் அலுத்கமா, பெருவலா பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைதிக்கான விருதை வாங்க பொலிவியா சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, "சட்டம் தனது கடமையை செய்யும். யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது" என்று அங்கிருந்தபடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே இஸ்லாமியரான, சட்டத்துறை அமைச்சர் ஹக்கீம் , "பவுத்தர்கள் தாக்குதல் நடத்தியதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்த அரசில் அங்கம் வகிக்க நான் அவமானப்படுகிறேன்" என்று தெரிவித்ததாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications