நாகை மீனவர்கள் 8 பேர் விடுதலை.. கடல் சீற்றத்தை காரணம் சொல்லி இலங்கை பிடியிலிருந்து தப்பினர்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் ரங்கநாதன் (29), ஆனந்தவேலு (50), லட்சுமணன் (40), வினோத் (28), பாலமுருகன் (35), சித்திரவேலு (28), சாமிநாதன் (25), கண்ணன் (27) ஆகிய 8 பேரை இலங்கை மீனவர்கள் சிறை பிடித்து சென்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நாகை, அக்கரைப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர்கள் கடந்த 2ம் தேதி கடலுக்கு சென்றிருந்தனர்.

8 Indian fishermen free from Srilanka

இவர்கள் திங்கள்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில் முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்து எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, மீனவர்களையும், அவர்களது படகையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர். பின்னர் நாகை மீனவர்களை இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடல் சீற்றம் காரணமாக படகு எல்லை மீறி வந்து, இலங்கை மீனவர்கள் படகுகள் மீது மோதியதாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அந்த 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+