பிரபாகரனுக்கு பயந்து கொழும்பில் 'பாதாள சொகுசு மாளிகை" அமைத்தேன்... மகிந்த ராஜபக்சே
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விமான தாக்குதல்களுக்கு அஞ்சி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சொகுசு பதுங்கு குழி அமைத்ததாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ரகசியமாக ஒரு பதுங்கு குழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பதுங்கு குழியும் கூட ஒரு சொகுசு மாளிகையாகத்தான் இருந்ததும் அம்பலமானது.

இந்த பாதாள சொகுசு மாளிகைக்குள் நுழைவதற்கு ரகசிய கோட்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியே வருவதற்கும் இதேபோல் கோட்வேர்டு இருக்கிறதாம். பதுங்கு குழி என்று சொல்லப்பட்டாலும் கூட அது முழுவதும் சொகுசாக வாழ்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மகிந்த ராஜபக்சே, இலங்கை ராணுவ தாக்குதல்களில் இருந்து தப்பிக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கி குழி அமைத்திருந்தார்.

அதேபோல் விடுதலைப் புலிகள் விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தியதால்தான் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழி அமைக்கப்பட்டது. ஒருவேளை ஜனாதிபதி மாளிகை தாக்கப்பட்டால் அந்த பதுங்கு குழியில் இருந்து ஜனாதிபதி மாளிகை செயல்படும் என்பதற்காகத்தான் கட்டப்பட்டது. இதில் ஒரு தவறுமே இல்லை என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications