விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்.. கச்சத்தீவை பெற முயலும் இந்தியா? ஈழத் தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு!
யாழ்ப்பாணம்: கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியா தீவிரம் காட்டுவதாக ஈழத் தமிழர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு வழங்கக் கூடிய நிவாரண பொருட்களை திருப்பி ஒப்படைப்போம் என்றும் ஈழத் தமிழர்கள் கூறி வருகின்றனர்.
Recommended Video
1974-ம் ஆண்டு இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதைய ஒப்பந்தத்தின் சரத்து 6 ஆனது, தமிழகத் தமிழர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டியிருந்தது. ஆனால் 1976-ம் ஆண்டு இந்த உரிமை பறிக்கப்பட்டது.
1983-ம் ஆண்டு இலங்கையில் சிங்கள ராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகள் இடையேயான யுத்தம் தொடங்கியது முதல் கச்சத்தீவு பிரதேசம் சூனிய பிரதேசமாகிப் போனது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற 800க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்திருக்கிறது. ஆனால் இதுவரை மத்திய அரசு இப்படுகொலைக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

மீனவர்கள் படுகொலை
2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழகம், ஈழத் தமிழ் மீனவர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆனால் தமிழக மீனவர்கள் மீதான சிங்கள ராணுவத்தின் ஒடுக்குமுறை ஓயவில்லை. தமிழக மீனவர்களை கைது செய்வது, மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

கச்சத்தீவும் தமிழகமும்
இதனால் கச்சத்தீவை மீண்டும் மத்திய அரசு மீட்க வேண்டும் என்பது தமிழகத்தின் நெடுநாள் கோரிக்கை. இது தொடர்பாக சட்டப் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மிக மோசமான நிலைமையை அடைந்ததை தொடர்ந்து இந்தியா ஏராளமான கடனுதவியை வழங்கியது.

கச்சத்தீவு பிரச்சனை
இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம் மேற்கொண்ட பின்னர் இக்கருத்து வலுவடைந்துள்ளது. சென்னையில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதனை வலியுறுத்தி இரந்தார்.

நிவாரண உதவி வேண்டாம்
ஆனால் கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் கொடுக்கவே கூடாது என்பது ஈழத் தமிழ் மீனவர்களின் கோரிக்கை. இப்போது ஈழத் தமிழ் அரசியல் தலைவர்களும் கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கவே கூடாது என்கின்றனர். இந்தியாவிடம் நீண்டகால குத்தகைக்கும் கூட கச்சத்தீவை தரக் கூடாது என்கின்றனர் ஈழத் தமிழர்கள். நிவாரண உதவிகளைக் கொடுத்து கச்சத்தீவை திரும்பப் பெறும் பேச்சுகளை நடத்தினால் எங்களுக்கு நிவாரண உதவிகளே தேவை இல்லை என்பதும் ஈழத் தமிழரின் நிலைப்பாடாக உள்ளது.












Click it and Unblock the Notifications