"இதுதான் முதல்முறை.." இலங்கையில் முதல்முறையாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி.. குவிந்த பொதுமக்கள்
கொழும்பு: இலங்கை நாட்டில் முதல்முறையாக இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பல காளைகளும், மாடு பிடி வீரர்களும் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் நடக்கும். மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகெங்கும் புகழ்பெற்றவை.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கூட மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்கப் பார்வையாளர்கள் குவிவது வழக்கம். தமிழகத்தில் சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
இலங்கை: அதன்படி இந்தாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்துள்ள தச்சங்குறிச்சி என்ற இடத்தில் நடக்கிறது. இதற்கிடையே முதல்முறையாக இலங்கையிலும் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இன்று காலை 10 மணியளவில் இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.
கடந்த ஆண்டு திருச்சி வந்த போதே இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது.
தச்சங்குறிச்சி தொடங்கிய தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு! சீறி பாயும் காளைகள்! அடக்க தயாராக காளையர்கள்
இலங்கை ஜல்லிக்கட்டு: ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலாத் துறை சார்பில் அங்கே பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் இந்த பொங்கல் விழா நடக்கும் நிலையில், முதல் நாளான இன்று காலை 10 மணிக்குத் திரிகோணமலை, சம்பூர் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 200 காளைகளும், சுமார் 100க்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதற்குத் தேவையான கேலரி, மேடை, இரும்பு தடுப்புகள் ஆகியவை அமைக்கப்பட்டன. இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், அதைக் காணப் பலரும் திரிகோணமலைக்குக் குவிந்து இருந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications