For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய- இலங்கை இடையிலான இணைப்பு மலையகத் தமிழர்கள்.. மோடி புகழாரம்

மலையக மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நுவரெலியா: உரிமைக்காக போராடிய மக்களை மறக்க மாட்டோம் என்று இந்திய பிரதமர் மோடி இலங்கையில் பேசியுள்ளார். மலையக மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புத்தர் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று நுவரெலியாவில் மலையக தமிழர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் புகழாரம் சூட்டினார்.

India supports Lankan Tamil People says Indian PM Modi

தமிழ்தாயின் பிள்ளைகள் பழமையான தமிழ் பேசுவதில் பெருமை என்று கூறினார். இந்திய, இலங்கை அரசுகளுக்கு இணைப்பு மலையக மக்கள் என்று கூறிய அவர்,

உரிமைக்காக போராடியவர்களை மறக்கமாட்டோம் என்றார்.

நான் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன், வளர்ச்சிக்கான செய்தியை காந்தி தெரிவித்தார் என்றார். காந்தி இலங்கை மலையகப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டார். காந்தி சர்வதேச மையம் மாத்தளையில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மதுரை, தஞ்சை நாயக்கர்களுடன் இலங்கை அரசர்கள் திருமண உறவு ஏற்பட்டுள்ளது. மலையக மக்களின் உறவினர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றனர்
மலையக மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.

English summary
Indian prime minister Modi told We are full support Lankan Tamil People.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X