விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு..கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க கராத்தே தியாகராஜன் வேண்டுகோள்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு மீது காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு மீது காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
நடிகர் விஷாலும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்த அவர், தனக்க விசில் சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

விஷாலுக்கு குஷ்பு வாழ்த்து
ஆர்கே நகர் இடைத்தேர்தல் மூலம் அரசியலில் குதித்துள்ள நடிகர் விஷாலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆகியோர் டிவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
|
குஷ்புவுக்கு எதிர்ப்பு
தனது டிவிட்டர் பக்கத்தில் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்பு நீ மாற்றத்தை கொண்டுவருவாய், உனக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு மீது காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கராத்தே தியாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குழப்பத்தையும் கலகத்தையும்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகை குஷ்பு, விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து குழப்பத்தையும் கலகத்தையும் ஏற்படுத்துகிறார் என்றும் கராத்தே தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

பார்ட் டைம் தலைவரா?
இந்திராகாந்தி பிறந்த நாள் விழாவில் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவர் என கூறியதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அப்போது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசர் பார்ட் டைம் தலைவரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடும் நடவடிக்கை - வலியுறுத்தல்
திமுக வேட்பாளர் மருதுகணேஷ்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள நிலையில் சுயேட்சை வேட்பாளர் விஷாலுக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து குட்டையை குழப்பி வரும் குஷ்பு மீது காங்கிரஸ் கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காராத்தே தியகாராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications