இனி அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழிலும் தேசிய கீதம்- இலங்கை அரசு
கொழும்பு: வரும் சுதந்திர தினத்திலிருந்து, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட வேண்டும் என அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கை அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேனாரத்ன செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் விழாக்களிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

இலங்கையில் சிங்கள மொழிக்கும், சிங்கள பெளத்த மக்களுக்கும் உள்ள அதே உரிமைகளும் சலுகைகளும், தமிழ் மக்களுக்கும் உள்ளன. தமிழ் பேசும் மக்களின் மொழியையும் மதித்து அவர்களின் அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்புகளின் ஒன்றாகும்.
அதை உறுதிப்படுத்தும் வகையில், வருகின்ற சுதந்திர தின நாளிலிருந்து (பிப் 4) இலங்கையில் சகல அரசாங்க நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் இலங்கையின் தேசியகீதம் பாடப்படும்.
இதையும் சிலர் எதிர்க்கக் கூடும். ஆனால் அவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை," என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications