For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் தொகுதியிலிருந்து கொழும்புக்கு ஆகஸ்ட் முதல் நேரடி விமான சேவை!

By Devarajan
Google Oneindia Tamil News

நுவரெலியா: இந்தியாவின் வாரணாசிக்கும் கொழும்புவுக்கும் இடையே விமான சேவை வரும் ஆகஸ்டில் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில், நுவரெலியாவில் மலையகத் தமிழர்கள் மத்தியில் பேசிய பிரதமர் வாரணாசிக்கும் கொழும்புக்கும் இடையே ஏர் இந்தியா விமான சேவை, வரும் ஆகஸ்டில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். வாரணாசி (காசி) என்பது மோடியின் லோக்சபா தொகுதியாகும். மேலும், இந்து மத வழிபாட்டாளர்களை ஈர்க்கும் நகரமாகும்.

Prime Minister Modi announces direct flight between Colombo and Varanasi.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கொழும்பு சென்றார் . அங்குள்ள கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே வரவேற்றார்.

வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேயுடன் கொழும்பு நகரில் உள்ள 120 ஆண்டு பழமையான கங்கராமய்யா கோவிலின் அங்கமாக திகழ்கிற சீமா மாலகா புத்த கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.

English summary
PM Narendra Modi announced, direct flight, between Colombo and Varanasi. He saying it will enable Buddhists and Hindus from both sides to visit important pilgrim sites in both the countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X